வசிம் தாஜூடீன் மரணம் குறித்த சீ.சீ.டி.வி. காட்சிகளில் முக்கிய பிரபு (வி.ஐ.பி) ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாக அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள இந்த வீடியோ காட்சிகள் நீதிமன்றிற்கு விரைவில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த காட்சிகளில் சில பிரபுக்கள் இருக்கின்றார்கள்.
இந்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என சிங்கள செய்தி சேவை ஒன்றுக்கு அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
2012ம் ஆண்டு உயிரிழந்த தாஜூடீனின் மரணம், ஓர் கொலையே என அண்மையில் சட்ட வைத்திய அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதுடன், எதிர்வரும் 10ம் திகதி நீதிமன்றம் இது கொலையா விபத்தா என்பது பற்றிய விபரங்களை அறிவிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அமைச்சரவை இணைப் பேச்சாளர், வீடியோ காட்சியில் பிரபு ஒருவரின் குடும்ப உறுப்பினர்கள் காணப்படுவதாக இன்று கருத்து வெளியிட்டுள்ளார்.


0 Comments