Subscribe Us

முல்லைத்தீவில், மழையின் மத்தியில் குடைபிடித்து பரீட்சை எழுதும் எம் மாணவர்கள்..(படங்கள் ,வீடியோ)

முல்லைத்தீவு இரணைப் பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலய மாணவ மாணவிகள் பலத்த மழைக்கு மத்தியில் குடை பிடித்தபடி பரீட்சை எழுதியதாகத் தெரிய வருகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இரணைப்பாலை ரோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்கள் குடை பிடித்தவாறு பரீட்சை எழுதும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாடசாலையில் அமைக்கப்பட்டு உள்ள ஓலைக் கொட்டகைக்குள் வகுப்புக்கள் நடைபெற்று வந்தான. அக் கொட்டகைக்குள்லையே தற்போது மாணவர்களுக்கு மூன்றாம் தவணை பரீட்சை ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.
தற்போது வடக்கில் பெய்து வரும் கடும் மழைக்கு ஓலைக் கொட்டகைகள் ஈடு கொடுக்க முடியாது அதனுள் மழை நீர் ஒழுக ஆரம்பித்து உள்ளது. அதனால் கொட்டகைக்குள் இருந்து பரீட்சை எழுதும் மாணவர்கள் குடை பிடித்தவாறே பரீட்சை எழுதி வருகின்றனர்.
புலம்பெயர் வாழ் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் இப்பிரதேச மக்கள் இப்பாடசாலையின் அபிவிருத்தியில் கூடிய கவனம் செலுத்துமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.
இதேவேளை இதுபோன்ற படங்களை முகநூலில் பகிர முதல், இப்பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் “மழைக்கு மத்தியில் பரீட்சை எழுதும் மாணவ, மாணவிகள்.. மழைக்கு குடை பிடிப்பதில் கவனம் செலுத்துவார்களா? பரீட்சை எழுதுவதில் கவனம் செலுத்துவார்களா?? என்பதை சிறிதும் சிந்திக்காமல், எம் அவல நிலையை யார் கண் நோக்குவார்?” என்று பதிவிடுவது எந்த வகையில் நியாயம் என்பது எமக்குப் புரியல”…












Post a Comment

0 Comments