Subscribe Us

header ads

புத்தளத்தின் புத்தி ஜீவிகளுக்கும், புத்தளத்தின் வளமான எதிர் காலத்தை பற்றி சிந்திக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களுக்கும் அன்பு மடல்.


எமது மண் எத்தனையோ அறிஞர்களையும் , திறமைசாலிகளையும் எமக்கு வாரி வழங்கிய போதிலும் நாம் அவர்களை முழுமையாக பயன் படுத்த தவறியே வருகின்றோம். 

எமது அறியாமையும், எமது அசிரத்தையும் எமது சமூகத்தின் பாரிய ஒரு எழுச்சிக்கும் , முன்னேற்றத்திற்கும் தடைக்கல்லாக உள்ளது. எமது மண்ணின் எத்தனையோ பொக்கிஷங்கள் எம்மை விட்டு மறைந்து விட்டன - அஸ்தமித்து விட்டன. இன்னும் எத்தனையோ பயன் பெறக்கூடிய பொக்கிஷங்கள் எமது கையை விட்டு நழுவிப்போகும் தருவாயில் உள்ளன. என்று எமது மக்கள் எமது சமூகத்தின், எமது நகரின் எழுச்சியையும், மறுமலர்ச்சியையும் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கின்றார்களோ அன்றுதான் எமது சமூகத்தின் விடியலாகும்.

புத்தளத்தின் அபிவிருத்தியும், புத்தளத்தின் எழுச்சியும் , புத்தளத்தின் முகவரியும் பெரும்பாலும் நகர சபையில்தான் தங்கியுள்ளது. எமது மண்ணில் பிறக்காத ஆனால் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக எமது மண்ணில் வாழ்ந்து வரும் HOSPITAL SAFEEK எமது மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்துள்ளார். அவர் புத்தளம் வைத்தியசாலையில் கடமையாற்றிய காலப்பகுதியில் எமது மக்களுக்கு செய்த உதவிகளை மக்கள் இலகுவாக மறந்து விட முடியாது.

வடமே மேல் மாகாணத்தில் SUBRA என்ற பரீட்சைக்கு தோற்றிய 58 நபர்களில் தெரிவு செய்யப்பட்ட 19 பேரில் இவர் 5 ஆமவர் என்பதும், தமிழ் மொழிமூலம் தோற்றியவர்களில் தெரிவான ஒரே நபர் இவர்தான் என்பதும் எமது மண்ணுக்கு பெருமை சேர்கின்றதல்லவா? 

இவ்வாறான திறமை மிக்க ஒரு நபர் - எமது நகர சபை செயலாளர் ஆசனத்தில் அமர்த்தப்பட வேண்டியவர்- எமது மண்ணுக்கு பல அபிவிருத்திகளையும், சேவைகளையும் செய்யக்கூடியவர். ஆனால் துரதிஷ்டம் தன்னை விட தகுதியில் குறைந்த ஒரு செயலாளருக்கு கீழ் A. O ஆக பணியாற்றி வருவதைப்பற்றி எமது மக்கள் இன்னும் சிந்திக்காமல் இருப்பது ஏன்? 

எங்கே எமது அரசியல் தலைமைகள்? எங்கே எமது புத்தி ஜீவிகள்? எங்கே எமது சமூக ஆர்வலர்கள்? எப்போது எமது எமது கண்கள் திறக்கும்? எப்போது நாம் தூக்கத்தில் இருந்து விழிப்பது?

எனவே அன்பு உள்ளங்களே சிந்தியுங்கள் நாளை எமது சமூகத்தின் வெற்றியும், எழுச்சியும் எமது கைகளில்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். 

................நன்றி..........
Uwais Abusales

Post a Comment

0 Comments