Subscribe Us

header ads

நேற்றைய சலகுன விவாதத்தினால் முஸ்லீம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன

இங்கு பலபேரின் கேள்வி நேற்றைய விவாதத்தினால் முஸ்லீம் மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்பதாகவே இருக்கின்றது முஸ்லீம்களுக்கு நன்மை கிடைத்திருந்தால் அதி மேதாவித்தனம் பேசுகின்றவர்கள் விலகி போயிருப்பார்களா ? இங்கு பிரச்சினை மன்னார் மாவட்டத்திற்கு வெளியே வாழும் மக்கள் பற்றியது அல்ல அதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும் ஆனந்த சாகர முன்வைத்த குற்றச்சாட்டு..

மன்னார் மாவட்டத்தில் சட்ட விரோத காடழிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம்.

சகோதரர் ரிசாத் பதியுதீன் போதைப்பொருள் வியாபாரம் செய்கிறார் என்ற இரண்டுமே மன்னார் மாவட்டத்தை பிரதிநித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் என்கின்ற வகையில் முதலாவது குற்றச்சாட்டுக்கும், தனி ஒருவனாக அவர்மீது சுமத்தப்பட்ட பாரிய இரண்டாவது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் கடமையும் அவருக்குண்டு அதை பிழையென்று இங்கு வாதிட எவருக்கும் உரிமையோ அருகதையோ இல்லை..,

முஸ்லீம் சமூகத்திற்கு நன்மை இல்லை என்று கூக்குரல் எழுப்புகிறீர்கள் மன்னார் மாவட்டத்திற்கு வெளியே இலங்கை முழுவதும் பரந்து வாழும் முஸ்லீம்களுக்கு நன்மை இல்லைதான் ஆனால் மன்னார் மாவட்டம் ஒரு போதுமே சிங்களவர்களுக்கு உரித்தான பூமி அல்ல என்ற உண்மை இங்கு வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது அதை ஏன் நன்மையாக பார்க்க மறுக்கிறீர்கள் அப்பிரதேசம் முழுக்க தமிழ், முஸ்லிம், கிறிஸ்த்தவர்களின் பாரம்பரிய பூமி என்ற உண்மை தெளிவாக்கப்பட்டிருக்கிறது அதை ஏன் நன்மையாக பார்க்க மறுக்கிறீர்கள்.

தனக்கு என்று ஒரு பிரச்சினையும் வராத வரைக்கும் அடுத்தவனுக்கு நடப்பது எல்லாமே கேலியாகவே தெரிகின்றது பலருக்கு.., துரத்தப்பட்ட மக்களுக்கான மீள்குடியேற்ற போராட்டமே இது மாட மாளிகைளில் வசித்துக்கொண்டு சல்லாபமும் உல்லாசமும் அனுபவிக்கின்றவர்களுக்கு துரத்தப்பட்ட மக்களின் வலிகள், வேதனைகள் எல்லாமே கேலிக்கூத்தாகவும் நகைப்பாகவும் மட்டுமே தெரியும் அந்த மக்களின் இடத்தில் இருந்து பார்க்கின்ற நேரமே இந்த விவாதம் விளக்கம் எல்லாம் மிகவும் அவசியமான ஒன்றாக தெரியும்.., மன்னார் மாவட்டத்தில் காடழிப்பு மேற்கொள்ளப்படவில்லை இழந்த தாய்நிலங்களை மீள கேட்கிறோம் என்ற தொனிப்பொருளிலேயே பல சிங்கள மக்கள் நேற்றைய விவாதத்தை பார்த்திருப்பார்கள்..

முடிந்தளவு மன்னார் மாவட்டத்தில் நிலங்களை இழந்து துரத்தப்பட்ட மக்கள் அவர்களின் சொந்த நிலங்களில் குடியேற குரல் கொடுங்கள்.. அதுதான் மனசாட்சியுள்ள ஒரு மனிதனுக்கு அழகு.. மாறாக இலாப நஷ்டம் பார்க்க வேண்டாம்.

மறுபடியும் சொல்கிறேன் விளைந்த நன்மைகள் என்னவென்று பார்க்க இது மன்னார் மாவட்டத்திற்கு வெளியே வாழும் மக்களின் பிரச்சினையல்ல.. நேற்றைய விவாதத்தை சிறப்பான முறையில் முடித்திருந்த அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்தே ஆகவேண்டும்...

-Razana Manaf-

Post a Comment

0 Comments