Subscribe Us

ஹிஜாபுக்கு தடை விதிக்க பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் இஸ்லாமிய பெண்கள் அச்சமின்றி ஹிஜாபை பேணலாம் அதற்காக விதிக்க படும் அபராத தொகையை எனது சமுதாய சகோதிரிகளின் சார்பில் நான் செலுத்தி விடுகிறேன் பிரான்ஸ் தொழில் அதிபர் ரஷீத் நாகஸ் பிரகடனம்


உலகெங்கும் உள்ள இஸ்லாமிய பெண்கள் இருவகையிலானா ஹிஜாபை பேணிவர்கின்றனர்


ஒரு வகை முகத்தை மறைக்காமல் உடல் முழுவதையும் மறகை்கும் ஹிஜாப் 

மற்றோரு வகை முகத்தையும் மறைக்கும் விதத்திலான ஹிஜாப்

இந்த இரண்டாவது வகையான ஹிஜாபுக்கு பிரான்ஸ் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு தீவிர படுத்த பட்டிருக்கும் இந்த தடையில் இஸ்லாமிய பெண்கள் ஐரோப்பாவில் பரவலாக பாதிக்க பட்டிருக்கின்றனர் 

அல்ஜீரிய வம்சாவழியை சார்ந்த பிரான்ஸ் தொழில் அதிபர் ரஷீத் நகாஸ் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்

அவரது அறிவிப்பில் சில ஐரோப்பிய நாடுகள் ஒரு வகை ஹிஜாபை தடை செய்து இருப்பது பற்றி இஸ்லாமிய பெண்கள் கலங்க வேண்டாம் அவர்கள் விரும்பும் ஹிஜபாபை அவர் பேணி கொள்ளலாம் 

அதற்கு விதிக்க படுகின்ற அனைத்து அபராதங்களையும் ஹிஜாபை பேணும் சகோதிரிகளின் சார்பில் நான் செலுத்தி விடுகிறேன் 

ரஷீத் நகாஸின் இந்த அறிவிப்பை இஸ்லாமிய சமுதாயம் நன்றியுடன் வரவேற்றுள்ளது 


Post a Comment

0 Comments