Subscribe Us

சிரியா அகதிகளுக்கு உதவு கை கோர்க்கும் கனேடிய இணையதளவாசிகள்: 40,000 டொலர் திரட்ட முடிவு

கனடா நாட்டிற்கு புகலிடம் கோரி வரும் சிரியா அகதிகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அந்நாட்டு இணையதளவாசிகள் சுமார் 40,000 டொலர் நிதி திரட்ட முடிவு செய்துள்ளனர்.
கனடாவின் நோவா ஸ்கோஷியா மாகாணத்தில் உள்ள ஹேலிபேக்ஸ் நகர இணையதளவாசிகள் சிரியா நாட்டு அகதிகளை அன்புடன் வரவேற்பதுடன் அவர்களுக்கு உதவும் வகையில் முழுவீச்சில் இறங்கியுள்ளனர்.
இதன் முதற்கட்டமாக, இதே நகரில் வசிக்கும் Val Macdonald என்பவர் சிரியா அகதிகளுக்கு உதவி செய்வதற்கென சிறப்பு பேஸ்புக் பக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த பக்கத்தில் அகதிகளுக்கு உதவ ஆதரவு தாருங்கள் என பதிவேற்றம் செய்தவுடன் ஆயிரக்கணக்கான நபர்கள் தங்களது ஆதரவினை அளித்துள்ளனர்.
மேலும், குடியமர்வு துறையில் அவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளதால், அகதிகளின் உடனடி தேவைகள் என்ன என்பது உடனுக்குடன் அறிந்து உதவி செய்து வருகிறார்.
உதாரணமாக, கடந்த அக்டோபர் மாதம் பிரித்தானிய கொலம்பியா மாகாணத்திற்கு வந்தடைந்த சிரியா அகதிகளுக்கு உதவ குழந்தைகள் அணியும் ஆடைகளை வழங்கி உதவுமாறு சில தினங்களுக்கு முன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை கண்ட சுமார் 70 சதவிகித இணையதளவாசிகள் 3 மாதங்களுக்கு தேவையான் ஆடைகளை வாரி வழங்கியுள்ளனர்.
இதே பகுதியில் சுமார் 63,000 கனேடிய குடிமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் நிதி திரட்டும் பணியில் இறங்கினால், சுமார் 40,000 டொலர் வரை நிதி சேகரிக்க முடியும் என Val Macdonald நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கனேடிய குடிமக்கள் மட்டுமின்றி, கனடா குடியமர்வு துறை அதிகாரிகளும் சிரியா அகதிகளுக்கு உதவி செய்வதற்கு ஊக்கம் அளித்து வருகின்றனர்.
மேலும், அடுத்தாண்டு இறுதிக்குள் சுமார் 50,000 சிரியா அகதிகளுக்கு புகலிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதால், இந்த நிதி திரட்டும் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சேகரித்து வழங்கும் பணியினை கூடுதலாக விரிவுப்படுத்த உள்ளதாக Val Macdonald தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments