நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர தமக்கு தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தல் விடுத்ததாக நேற்று தெமட்டகொடையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞர் பொலிஸாரிடம் வாக்குமூலம்; வழங்கியுள்ளார்.
தாம் சுமார் 6 பேர் கொண்ட குழுவினால் லான்ட்ரோவர் வாகனம் ஒன்றில் பலாத்காரமாக கொண்டு செல்லப்பட்டு பின்னர் தாக்கப்பட்டதாக குறித்த இளைஞர் பொலிஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்
நேற்று மாலையளவில் குறித்த இளைஞர் அவர் பணியாற்றும் இடத்தில் இருந்து கடத்திச் செல்லப்பட்டார்.
பின்னர் இரவு 10 மணியளவில் அவர் தெமட்டகொட பொலிஸுக்கு சென்று தமது முறைப்பாட்டை தெரிவித்தார்.
இதன்போது அவரின் முகம் மற்றும் உடலில் காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்ட பின்னர் ஹிருனிக்கா பிரேமசந்திரவினால் தனிப்பட்ட ரீதியில் அச்சுறுத்தப்பட்டதாக தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப தகவல்களின்படி ஹிருனிக்காவுக்கு சொந்தமான வாகனத்திலேயே குறித்த இளைஞர் கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.


0 Comments