ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனத்தின் பாராட்டும் கௌரவிப்பும் நிகழ்வு யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நேற்று (6) மாலை 4 மணியளவில் ஆரம்பமாகியது.
இந்நிகழ்வு நிறுவனத்தின் ஸ்தாபகர் தேசமான்ய எம்.ஏ.சி.எம் அமீன் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது 2015ம் ஆண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் நூறுக்கு மேற்பட்டபுள்ளிகளை பெற்ற மாணவர்களும் மற்றும் அம்மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியைகளான எச்.ஆபிதா ,எஸ்.பர்ஜானா ஆகியோரும் வாழ்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.
அத்தோடு ரமீஸ் சிபா, நஸீர் நஸீரா ஆகிய இரண்டு பல்கலைக்கழக மாணவிகளும் யாழ் வலையக்கல்வி பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜா அவர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் அல் ஹதீஜா, அல் அஸ்கார், மண் ப உள் உளூம், ஆகிய மூன்று முன்பள்ளி மாணவர்களுக்கும் சீரூடைகளும் பாடப்புத்தக பைகளும் வழங்கப்பட்ன.
இதன் போது பிரதம அதிதிகளாக யாழ் கல்வி வலய பணிப்பாளர் என்.தெய்வேந்திரராஜாவும் ,யாழ் ஒஸ்மானியா கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம் அஷ்ரப், யாழ் ஹதீஜா மகளிர் கல்லூரி அதிபர் ஏ சி ஜான்ஸி, யாழ் ஒஸ்மானியா கல்லூரி உப அதிபர் வி மகேந்திரராஜா, ஆகியோர் கௌரவ விருந்தினராகவும் மற்றும் யாழ் கிளிநொச்சி ஜம்மியத்துல் உலமாசபை தலைவர் ஏ எம் ஏ அஸீஸ் மௌலவி, யாழ் கிளிநொச்சி முஸ்லிம் சம்மேளன தலைவர் ஏ எச் ஜமால் முஹிதீன் பொதுச்செயலாளர் ஆர் கே சுவர்கஹான் ,உபதலைவர் கே எம் நிலாம், யாழ் மாநகரசபை முன்நாள் உறுப்பினர் பி எஸ் எம் சரபுள் அனாம், முகம்மதியா ஜும்மா மஸ்ஜித் தலைவர் எஸ் ஏ சி முபீன், கே கே எஸ் வீதி மஸ்ஜித் தலைவர் எம் யு எம் தாஹிர், ஆகியோருடன் ஜே 85 . 86 .87. 88 கிராமசேவையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வை ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவன ஸ்தாபக தலைவர் எம் ஏ சி எம் அமீன் , பொருளாளர் ஏ எம் தையுப், உறுப்பினர் எம் ஐ ரொக்கீஸ் ,ஆர் ராபி ,அமைப்பாளர் யூசுப் ரமீஸ் ,ஜயூ.கேஸ ஆகியோரும் இணைந்து ஏற்பாடு செய்தனர்.
ஹிரா கல்வி மறுமலர்ச்சி நிறுவனமானது 4 வருடங்களாக வட பகுதி முஸ்லீம் மக்களின் கல்வியில் அதிக பங்களிப்புகளை வழங்கி வருவதுடன் அதன் தலைவராக டாக்டர் எம்.ஏ சி எம் ரம்சி செயற்பட்டு வருகின்றார்.
ஊடகவியலாளர் பாறுக் ஷிஹான்

0 Comments