Subscribe Us

சமூக மேம்பாட்டுக்காக உழைக்கும் சகோதரர் ஜீஷான் அசீர் அவர்களுக்கு பாராட்டு..


கற்பிட்டியைச் சேர்ந்த ஜீஷான் அசீர் அவர்களது சமூக சேவைகளை பாராட்டி, அதனை ஊக்குவிக்கும் வண்னம் கவித்தீபம் நுஸ்ரி ரஹ்மதுல்லாஹ் அவர்களினால் இதற்கான நினைவுச்சின்னம் கடந்த ஞாயிற்றுகிழமை புத்தளம் ஸாகிரா கல்லூரி (அஸ்வர் மண்டபத்தில்)  வழங்கி வைக்கபட்டது.

அத்தோடு இந்நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர் இஸட்.ஏ ஸன்ஹீர், அதிபர் எம். நாகராஜா, வைத்தியர் எஸ்.எச்.அரீம்ஸ், சமூக சேவையாளர் ஜீஸான் (அவர் சார்பாக அவர் மனைவி),வைத்தியர் எஸ் எச் அரீம்ஸ்,கலாபூஷணம் எஸ்.எஸ்.எம். ரபீக்,கவிதையாயினி சில்மியா, கலைமகள் ஹிதாயா ரிஸ்வி,அறிவிப்பாளர் ஹிஷாம் ஹூசைன், முஹம்மது முஹ்சி (ஆசிரியர்), ரஹ்மத்துல்லாஹ் (நுஸ்ரியின் தந்தை,நாகராஜா (அதிபர் இந்து பாடசாலை), இம்தாத் பஷர் ஆகியோர் பங்குபற்றினர்,

ஜீஷான் அசீர் பல சமூக அமைப்புகளுடன் இணைந்து கற்பிட்டி, புத்தளம் பகுதிகளில் பல சமூக மேம்பாட்டு சேவைகளுக்கு பங்களிப்பு செய்து வருவதோடு, கற்பிடியின் குரல்,  புத்தளம் டைம்ஸ், வோயிஸ் ஒப் சிலவ், ஜப்னா முஸ்லிம், ஆரம்பம் போன்ற பல செய்தி இணையதளங்களின் வடிவமைப்பு பற்றி அவர்களுக்கு தேவையான இணைய சேவை ஆலோசனைகளை வழங்கி வரும் சகோதரர் ஜீஷான் அசீர் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.

கற்பிடியின் குரல்
நிர்வாகம்

Post a Comment

0 Comments