Subscribe Us

header ads

ஐ.எஸ் தீவிரவாதம் இலங்கையில்! மறைக்கின்றது அரசு

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை அரசாங்கம் மறைத்து வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அங்கு குறிப்பிட்ட அவர்,

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

இந்த விடயத்தை வெளிநாடுகள் சொல்லும் வரையில் அரசாங்கம் காத்திருந்தமை ஏமாற்றமளிக்கின்றது. இந்த தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து அரசாங்கத்திற்கு பல தடவைகள் நாம் எச்சரிக்கை விடுத்திருந்தோம்.

இரண்டு வெளிநாடுகள் இலங்கையில் தீவிரவாத அச்சுறுத்தல் காணப்படுவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. தற்போதே இலங்கையின் புலனாய்வுப் பிரிவினர் இந்த அச்சுறுத்தல் குறித்து வாய் திறக்கின்றனர்.

மக்களுக்கு நாம் இது பற்றி ஏற்கனவே கூறியவை இன்று உண்மையாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments