Subscribe Us

புத்தளமும் வெள்ளமும் – தீர்வை நோக்கி நகரவேண்டிய நேரம் சரி

கடந்த வெள்ளிக்கிழமை முஹியித்தீன் ஜும்மாபள்ளியில் இடம்பெற்ற ஜும்மா பிரசங்கத்தில் மௌலவி அல்ஹாஜ் மின்ஹாஜ் இஸ்லாஹி அவர்கள் கூறியது போன்று, கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையினால் ஊரின் பல பகுதிகளும் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டது புத்தளத்தின் தற்கால பாரிய பிரச்சினைகளில் ஒன்று எனலாம். இது புத்தளத்தில் காலாகாலமாக நடப்பது ஒன்றாக இருந்தாலும் இம்முறை சற்று அதிகம் என்பதே உண்மையாகும்.

வருடா வருடம் பெய்யும் பருவ மழையினால் புத்தளம் நகரின் பல பகுதிகள் நீரில் மூழ்குவது வழமை. இதனால் நகரின் வீதி போக்குவரத்து பாதிக்கப்படும், வீடுகள் வெள்ள நீரில் முழ்கடிக்கபடுவதால் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு இடையூறுகள் ஏற்படும், பாடசாலைகளில் நீர் தேங்கிநிற்பதனால் கற்பித்தல் நடவடிக்கைகள் தடைப்படும் மற்றும் பாதைகளில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்கும். ஆனால் ஓர் இரண்டு நாட்களில் எல்லாம் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும் இதுதான் பழைய வழமை. இவை யாவுமே ஊரின் நகர் எல்லையில் இருந்து சற்று ஒதுக்குபுறமான (மணல்குன்று, கடையாகுளம், முல்லைநகர், முல்லிபுரம் போன்ற ) இடங்களிற்கு மட்டுமே மட்டுபடுத்தபட்டு இருந்துள்ளன. ஆனால் அண்மையகாலமாக சிறு மழைக்கும் புத்தளம் நகரின் மத்திய பகுதி கூட மழை வெள்ளத்தில் மூழ்கடிக்கபடுவதை கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது. இதனால் நகரின் அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. பாடசாலைகளை பல நாட்களுக்கு மூடப்படவேன்ன்டிய நிலைமைக்கு தள்ளபடுகின்றன. இது ஊரின் எதிர்காலத்திற்கான பாரிய சவாலாக அமைந்துள்ளது.

இவை அனைத்திற்கும் பலதரப்பான காரணங்களை சுட்டிக்காட்ட முடியும். அவற்றில், அரசின் பிழையான நகரதிட்டமிடல், மக்களின் திட்டமிடப்படாத வீடமைப்பு முறைகள், குப்பைகூலங்க்களை கண்டவாறு போடுவதால் அவை வடிகான்களை அடைத்தல், பள்ளமான காணிகளை தன் இஷ்டப்படி நிரப்புதல், நகரின் முன்னைய நாட்களில் காணப்பட்ட குளங்கள் பல மூடப்பட்டமை என பல அடங்கும். ஆனாலும் இந்த காரணங்களை பற்றி மீண்டும் மீண்டும் அலசுவதை இட்டும் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி செயற்படுவதே நிகழ்கால தேவையாக காணப்படுகிறது.

ஆகவே மௌலவி அவர்கள் கூறியது போல இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஊரின் அனைத்து தரப்பினரும் ஒன்றுபட வேண்டும்இதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியல்வாதிகள் முதல் ஊரில் உள்ள கூலித்தொழிலாளிகள் வரை இந்த விடயத்தில் பங்குதாரர்களாக வேண்டும். அரசியல் வேற்றுமை, ஜமாஅத் பிரிவினைகள் என அனைத்து தடைகரற்களையும் உடைத்தெறிந்து வெறுமணே புத்தளத்தான் எனும் உணர்வுடன் புத்தளம் நகரை ஒரு தூய நகராக மாற்றும் பணியில் அனைவரும் கைகோர்ப்போம்.
ஆனால் எனக்கு இருக்கும் பிரச்சனை என்னவென்றால் இவை அனைத்திற்கும் தலைமைதாங்குவது யார்...?? புத்தளம் பெரிய பள்ளி இதை பொறுப்பேற்குமா....?? இந்த விடயத்தில் புத்தளம் நகரில் இன்று உருவாக்கி உள்ள அனைத்து இளைஞ்சர் குழுக்களும் உள்வாங்கப்படவேண்டும். இன்ஷா அல்லாஹ் இவ்விடயத்தில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். வல்ல அல்லாஹ் நம் முயற்சியை வீனடிக்கமாட்டான். ஒன்றுபடுவோம் வெற்றிபெறுவோம்.

கொத்பாவில் கூறப்பட்டது போல இந்த பணியை இரண்டு திட்டகளாங்களாக பிரித்து செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். ஒன்று குறுகியகால திட்டம், மற்றையது நீண்டகால திட்டம். இந்த இரண்டு திட்டங்களை தீட்டுவதில் ஊரின் படித்தவர்க்கத்திற்கு பாரிய கடமை உண்டு. குறுகியகால திட்டம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு உட்பட்டதாக இருக்கலாம். அதன் நோக்கம் இந்த பிரச்சனைக்கான ஒரு தற்காலிக தீர்வை பெற்று தரக்கூடியதாக அமையவேண்டும். குறுகியகால திட்டம் செயற்படுத்தபடும் அதேநேரம் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தரும் நீண்டகால திட்டமும் தீட்டப்பட்டு செயற்படுத்தபடவேண்டும். இதற்கான கால எல்லையாக ஐந்து தொடக்கம் பத்து வருடங்களை கூட நிர்ணயிக்கலாம். இவை அனைத்தும் விரைவாக கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்க வேண்டும்.
ஹனான் அஹ்மத்

Post a Comment

0 Comments