இளம் பெண்ணின் வைபருக்கு கையடக்கத்தொலைபேசிக்கு 'ஐ எல் யூ' என்ற தகவலை அனுப்பிய நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
65 வயதான குறித்த நபர் அப்பெண்ணின் தந்தையின் நண்பரென தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக்கு சென்ற வேளையில் தொலைபேசி இலக்கத்தை பெற்றுள்ள அந்நபர் பின்னர் 'ஐ லவ் யூ ' என தகவலும் , உதடுகளை காட்டும் ஸ்டிக்கரொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
பின்னர் பெண்ணின் முறைப்பாட்டை அடுத்து கொம்பனி வீதியைச் சேர்ந்த குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


0 Comments