2015 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட தேசிய தமிழ் தின பேச்சுப் போட்டியில் மூன்றாமிடத்தை பெற்று சாதனை படைத்த பொத்துவிலைச் சேர்ந்த அப்துர் றஹ்மான் அப்துல் மலீக் என்ற மாணவனை பாராட்டி கௌரவிக்கும் விழா நேற்று மாலை (18) பொத்துவில் அல் ஹிதாயா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது.
அஸ் சபா நிறுவனத்தின் தலைவர் எம்.இர்ஷாத் மௌலவி தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு அம்மாணவனை பாராட்டி தங்கப்பதக்கம் மற்றும் பணப் பரிசிலையும் வழங்கி வைத்தார்.
இவ்வாண்டு நடாத்தப்பட்ட தேசிய தமிழ் தின பேச்சுப் போட்டியில் அப்துர் றஹ்மான் அப்துல் மலீக் என்ற மூன்றாமிடத்தையும், கிழக்கு மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






0 Comments