Subscribe Us

header ads

வருடம் டிசம்பர் 16–ந் தேதி முதல் 22–ந்தேதி வரை உலகம் இருளில் மூழ்கும்: வாட்ஸ்அப் வீடியோவால் பரபரப்பு !!!


நாசா நிறுவனம் அறிவித்துள்ளதாக வாட்ஸ் அப்பில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ சிறியவர்கள் முதல் பெரியவர்கள வரை அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது. அப்படி என்ன வீடியோ அது...

இந்த வருடம் டிசம்பர் 16–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை உலகம் முழுவதும் இருள் தொடர்ந்து இருக்கும். இந்த இருள் சூழ்ந்த நாட்களில் ஒரு பயங்கர சூரிய மண்டல புயல் வீசும். அதனால் ஏற்படப்போகும் தூசி துகள்கள் நிரம்ப போவதால் சூரிய ஒளி பூமிக்கு வருவது தடைபட்டு போகும் என்று நாசாவின் தலைவர் ஜார்ஜ் கோல்டன் கூறி உள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் இந்த சூரிய மண்டல புயலால் பூமி இருளில் மூழ்கினாலும், எந்த வித பாதிப்பும் பூமிக்கு ஏற்படாது. இதற்கு யாரும் அஞ்ச வேண்டியது இல்லை.

இது 250 வருடங்களில் ஏற்படப் போகும் மிகப்பெரிய சூரிய மண்டல புயல் ஆகும். 216 மணிநேரங்கள் தொடர்ந்து இருள் நீடிப்பதால் 6 நாட்கள் தொடர்ந்து மின் விளக்குகள் உடனேயே செயலாற்ற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். இது சம்பந்தமாக மேல் அதிகாரிகள் விபரங்களை நாசா இணையதளத்தில் பார்வையிட முடியும் என்றும் விஞ்ஞானி குளோவின் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு வாட்ஸ்அப்பில், நாசா நிறுவனம் அறிவித்துள்ளதாக வீடியோ வெளியாகி உள்ளது. இது மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது உண்மையா, புரளியா என்று தெரியாமல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை வரும் டிசம்பர் 16–ந்தேதியை எதிர் நோக்கி ஆவலுடனும், ஒருவித அச்சத்துடனும் உள்ளனர்.

குறிப்பு : இரவையும் பகலையும் தீர்மானிப்பவன் அல்லாஹ் நாசா விஞ்ஞானிகள் அல்ல

Post a Comment

0 Comments