Subscribe Us

header ads

102 வயதில் மணமகன் தோழன் ; பிரித்தானிய முதியவர் கின்னஸ் சாதனை (படங்கள்)

பிரிட்டனைச் சேர்ந்த 102 வயதான நபர் ஒருவர் திருமண வைபவமொன்றில் மணமகன் தோழனாக செயற்பட்டு புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 


74 வயதான அலெக்ஸ் என்பவருக்கும் சூ எனும் பெண்ணுக்கும் அண்மையில் திருமண வைபவம் நடைபெற்றது.

இத்திருமண வைபவத்தில் அலெக்ஸின் நண்பரான டேன் கிளமென்ட் எனும் 102 வயதான முதியவர் மணமகன் தோழனாக செயற்பட்டார். 

விவசாயியாக பணியாற்றிய டேன் கிளமென்ட்டுக்கு இரு பிள்ளைகளும் 4 பேரப்பிள்ளைகளும் 8 பூட்டப் பிள்ளைகளும் உள்ளனர்.

மணமக்களுடன் அலெக்ஸ் (வலமிருந்து 2 ஆவதாக)                        


இதற்குமுன் 1940 களில் அவர் திருமண வைபவமொன்றில் மணமகன் தோழனாக விளங்கினாராம்.

தற்போது 102 வயதில் அவர் மணமகன் தோழனாக விளங்கியமை புதிய உலக சாதனையாக கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

டேன் கிளமெனை மணமகன் தோழனாக தெரிவுசெய்வதில் தாம் மிகுந்த மகிழ்ச்சியடைந்த அலெக்ஸ், சூ தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயத்தில் வயது கருத்திற்கொள்ளப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர். 

இதற்குமுன் 2014 ஆம் ஆண்டு ரொனால் ஹோர்பி என்பவர் 96 வயதில் மணமகன் தோழனாக விளங்கியமையே கின்னஸ் சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments