Subscribe Us

header ads

எதிர்கால மாணவ சமூகத்தின் வளர்ச்சிக்கு தியாகங்களை செய்ய முன்வரவேண்டும் - எம்.எச்.எம்.நவவி (PHOTOS)

பாடசாலைகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கு காரணமாக பிரதேசத்தில் உள்ளவர்கள்  இத்துறையின் பால் ஆர்வமின்மை என தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் எதிர்கால மாணவ சமூகத்தின் வளர்ச்சிக்கு தியாகங்களை செய்ய முன்வரவேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி கேட்டுக்கொண்டார்.

கைத்தொழில்.வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் புத்தளம் மணல் குன்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்திறப்பு விழா மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு என்பன இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் எம்.எச்.எம்.றாசிக் தலைமையில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர்,புத்தளம் மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளர் அலிசப்ரி,புத்தளம் நகர ஜக்கிய தேசிய அமைப்பாளரை் அலிகான்,புத்தளம் வலய தமிழ் மொழி பிரதி கல்விப் பணிப்பாளர் சன்ஹிர்,வடக்கு கோட்ட கல்வி பணிப்பாளர் மஹ்ருப்,முசலி பிரதேச சபையின் முன்னாள் பிரதி தவிசாளர்  பைரூஸ் உட்பட பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நவவி தமதுரையில் –

சில காலம் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றிருந்ததன் காரணமாக இப்பிரதேசத்தின் பல அபிவிருத்திகள் தொடர்பில் நடவடிக்கையெடுக்க முடியாமல் போனது.ஆனால் இன்று ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் வந்துள்ளேன்.புத்தளம் கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்களுக்கு வெற்றிடங்கள் இருக்கின்றன.குறிப்பாக வெளி மாவட்ட ஆசிரியர்கள் நியமனம் பெறுவதாற்காக புத்தளம் மாவட்டத்தில் நியமனம் பெறுகின்றனர்.பின்னர் அவர்கள் இடமாற்றம் பெற்று செல்கின்றனர்.ஆனால் தமிழ் மொழி மூலமான ஆசிரியர்கள் நியமனத்திற்கு எம்மவர்கள் விருப்பம் கொள்வது குறைவு,வேறு துறைகளுக்கு அவர்கள் செல்கின்றனர்.

இந்த நிலையில் எமது கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள் எனது வேண்டுகோளின் பேரில் கல்வி அமைச்சர் அக்கிலவிராஜ் காரியவசம் அவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.அடுத்த கட்ட நகர்வராக அவரை புத்தளத்துக்கும் அழைத்துவருவதற்கு நடவடிக்கையினையும் எடுத்துள்ளார்.

பாராளுமன்ற பிரதி நிதியாக இருக்கும் நானும்,,அது போல் மாகாண சபை உறுப்பினரான தாஹிரும் இணைந்து இந்த பாடசாலையின் பல தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கையெடுப்போம்.மாணவ சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவோம் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி அழைப்புவிடுத்தார்.

-Irshath Rahumathullah-










Post a Comment

0 Comments