இலங்கையின் முன்னணி சைனீஸ் உணவகங்களில் ஒன்றான சைனீஸ் ட்ராகன் கஃபே, சமூக அக்கறையுடனான சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
ஹெந்தல ப்ரீத்திபுர சிறுவர் இல்லத்தையும், ஹெந்தல சிறுவர்கள் காப்பகத்தையும் சேர்ந்த குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு உலக உணவு தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி சுவை மிக்கதும், ஊட்டச் சத்து நிறைந்த உணவு வகைகள் மற்றும் பால் பவுடரை வழங்க உணவகம் முன்வந்திருந்தது.
“நினைவிருக்கும் உணவு” எனும் தொனிப்பொருளில் சைனீஸ் ட்ராகன் கஃபே மூலமாக முன்னெடுக்கப்பட்ட இந்த சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டத்தின் மூலமாக, இந்த சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த 100 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு மதிய உணவு மற்றும் பால் மா ஆகியன வழங்கப்பட்டிருந்தன.
இந்த சமூக பொறுப்புணர்வு செயற்திட்டத்துக்காக, பம்பலப்பிட்டி, ராஜகிரிய, கல்கிசை, கொழும்பு கோட்டை மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகங்கள் மூலமாக திரட்டப்பட்ட வருமானத்திலிருந்து நிதி பெறப்பட்டிருந்தது.
1942 ஆம் ஆண்டு இலங்கைக்கு வருகை தந்த சீனர்கள் மூலமாக, சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம் பம்பலப்பிட்டியில் ஸ்தாபிக்கப்பட்டது. பாரம்பரிய சீன உணவு வகைகளை தயாரித்து வழங்கும் வகையில் இந்த உணவகம் செயலாற்றி வருகிறது.
73 ஆண்டுகளாக, சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகம், இலங்கையின் நுகர்வோருக்கு 300க்கும் அதிகமான சுவை மிகுந்த உணவு வகைகளை வழங்கி வருகிறது. தற்போது உணவகத்தின் பிரபல்யம் வாய்ந்த Hot Butter Cuttlefish, Seafood Fried Rice, Chilly Chicken, Chilly Paste மற்றும் உள்நாட்டவர்களின் சுவைத்தெரிவுகளுக்கமைய தயாரிக்கப்படும் சீன உணவு வேளைகள் போன்றன அதிகளவு வாடிக்கையாளர்களால் விரும்பப்படுகின்றன.
சைனீஸ் ட்ராகன் கஃபே உணவின் சுவை பிரத்தியேகமானதாக அமைந்திருப்பதுடன், அந்த உணவகமொன்றுக்கு விஜயம் செய்து, இந்த சுவையை கட்டாயம் ஒருவர் அனுபவிக்க வேண்டியுள்ளது.
சைனீஸ் ட்ராகன் கஃபே முகாமைத்துவ பணிப்பாளர் நைஷாட் உதேஷி கருத்து தெரிவிக்கையில்,
“சுமார் ஏழு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நாம் உணவு வகைகளை தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளோம். இது போன்ற சமூக பொறுப்புணர்வு செயற்திட்டங்களை முன்னெடுப்பது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. எனவே, எமது வருமானத்தின் ஒரு பகுதியை நினைவிருக்கும் உணவு சமூக பொறுப்புணர்வு செய்திட்டத்துக்காக ஒதுக்கப்பட்டிருந்தது.
உலக உணவு தினத்தை முன்னிட்டு இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த செயற்திட்டத்தில், நேரடியாகவும், மறைமுகமாகவும் பங்களிப்பு வழங்கியவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.
சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தில் காணப்படும் சூழல், குடும்பங்கள், நண்பர்கள் குழுக்கள், உள்நாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறு வருகை தரும் விருந்தினர்களுக்கு நட்புறவான சேவைகளை வழங்கும் வகையில் உணவகத்தின் ஊழியர்கள் செயலாற்றி வருகின்றனர்.
சைனீஸ் ட்ராகன் கஃபே உணவகத்தினால் வழங்கப்படும் சேவைகளில் வாடிக்கையாளர்களுக்கு உணவகத்திலிருந்து உணவு உட்கொள்ளல் (Dine-in) உணவை வீட்டுக்கு எடுத்துச் செல்லல் வசதி (Take Away food), வீட்டுக்கு மற்றும் அலுவலகத்துக்கு உணவு விநியோகம் (Home and Office Delivery), அலுவலக ஊழியர்களுக்கான உணவு விநியோகம் (Meals for office staff) போன்றன அடங்கியுள்ளதுடன், chinesedragoncafe.com எனும் இணையத்தளத்தினூடாகவும் Facebook பக்கத்தினூடாகவும் உணவுகளை ஓடர் செய்து கொள்ளக்கூடிய வசதியும் வழங்கப்படுகிறது.
தமது உணவகங்களை அண்மித்துக் காணப்படும் பிரதேசங்களுக்கு 45 நிமிடங்களினுள் உணவை விநியோகிப்பதற்கான உறுதி மொழியை சைனீஸ் ட்ராகன் கஃபே வழங்குகிறது. வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட வெளிப்புற நிகழ்வுகளுக்கு (Outdoor catering) சைனீஸ் ட்ராகன் கஃபே சீன உணவு வகைகளுக்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கன், மொங்கோலியன், தாய்லாந்து மற்றும் பார்பெக்கியு உணவு வகைகளையும் வழங்குகிறது.
0 Comments