Subscribe Us

header ads

உள்நாட்டில் தயாராகும் முதல் பெரிய பயணிகள் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா (PHOTOS)


உள்நாட்டில் தயாரிக்கவுள்ள முதல் பெரிய பயணிகள் விமானத்தை சீனா இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த சி-919 என்ற இந்த விமானம் பெரும்பாலும் சீனப் பொருட்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள சில பாகங்களும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. 

150-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதி கொண்ட இந்த விமானத்தின் மூலம், விமான தயாரிப்பு நிறுவனங்களான, போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுடன், அதிக லாபம் தரும் விமான விற்பனை சந்தையில் போட்டியிடலாம் என்று சீனா எதிர்பார்க்கிறது. 

இந்த விமானம், வணிக ரீதியாக எப்போதைக்கு விற்பனைக்கு வரும் என்ற அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.




Post a Comment

0 Comments