Subscribe Us

header ads

அல்லாஹ்வின் பெயரால் முஸ்லிம்களை ஏமாற்றும் அமானா தக்கபுல் – பாதிக்கப்பட்ட சகோதரனின் வேதனை

அல்லாஹ்வின் பெயரால் முஸ்லிம்களை ஏமாற்றும் அமானா தக்கபுல் – பாதிக்கப்பட்ட சகோதரனின் வேதனை
அமானா தகபுலில் நானும் நம்பி ஏமாந்தவன் ஐம்பது லட்சம் தகாபுல் செய்து மாதமாதம் சுமார் நாற்பது ஆயிரம் வீதம் 65 மதம்களுக்குமேல் 26 லட்சம் கட்டிய நிலையில் எனது சுகயீனம் காரணமாக இந்தியாவில் வைத்தியம் செய்தும் ஒரு சதம் கூட தர முடியாது எண்று கூறி விட்டார்கள்!
பின்னர் தான் தெரிந்தது அமானாவில் தகாபுல் செய்தால் இங்கு மட்டும்தான் மருந்து எடுக்க வேண்டும் இல்லையேல் இங்கேயே சாக வேண்டும் என்பது!
பின்னர் தொடர்சியாக எனது வியாதி காரண்மாக வியாபாரத்தை நடத்த முடியாமல் போன போது தொடர்ந்தும் என்னால் மாதந்த தவனைப்பனத்தை கட்ட முடியாமல் போனது தினம் தினம் தொலைபேசி மூலம்தொடர்பு கொண்டு என்னை பணம் கட்டுமாறு கேட்பார்கள் வீடு தேடி வந்தும் பணம் பெற்றுச்சென்றார்கள்!
இறுதியில் எனது கட்டிய பணத்தை இலாபத்தோடு தருமாறு எழுத்து மூலம் கேட்டேன் அப்போதுதான் எனக்கு அதிர்சி காத்திருந்தது ஒரே ஒரு பத்து லட்சம் கொடுத்தார்கள் அதற்கு அவர்கள் கூறிய காரணம் இதுதான் இஸ்லாமிய தகாfஉல் என்றார்கள்.
நாட்டில் உள்ள பல முfதிகளுக்கு எழுதினேன் நேரிலும் உதவி கேட்டேன்அப்போதுதான் புரிந்தாது இவர்கள் எல்லாம் உண்மையை வாசிக்க முடியாத குருடர்கள் விளங்க முடியாத செவிடர்கள் என்பது!
எவ்வளவோ மன்றாடினேன் எனது கஸ்ட நிலயை விளங்கப்படுத்தினேன் ஒரு பத்தாயிரம் சக்காத் நிதியில் இருந்து அனுப்பினார்கள்!
இப்போதும் நான் கடன்காரனாக இருக்கிறேன் எனது கடனை தவணை முறையில் கட்டி வருகிறேன்.
எனது பார்வயில் இஸ்லாமிக் நிதி நிறுவனம் என்பது இன்னும் பூரி செய்யப்படத ஒரு விடயம் இதில் காகிதத்தில் வாசித்து பெற்ற அனுபவத்தில் சம்பாதிக்கும் திறமை உள்ளவர்கள் தான் இருக்கின்ரார்களே தவிர அனுபவத்தில் வியாபாரத்தில் ஈடு பட்டவர்கள் மிகவும் குறைவு.
மரத்தால் விழுந்தவனை மாடு மிதித்த கதைதான் இந்த அமானா தகாபுல்? எனது நம்பிக்கை நிச்சயம் புனித இஸ்லாம் ஒருவனை இப்படியாக எமாற்றி பணம் பெறும் வகையில் எந்த ஒரு கட்டத்திலும் செயல் படாது என்பது.
இதனை நீதிமன்றம் கொண்டு சென்று எனக்கும் எண் போண்ற பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி பெற்றுக்கொடுக்க ஆசையாக உள்ளேன், ஆனால் அதற்கு போதிய நிதி வசதி இல்லை யாரவது முன்வந்து இந்த விடயத்தை செய்ய முடிந்தால் நான் எனது பெயரில் எத்துனை எதிர்பு வந்தாலும் எண் உயிர் உள்ளவரை போராட காத்திருக்கிறேன்!

ஏமாற்றப்பட்ட சகோதரர் செய்யத் அஹமத்

Post a Comment

9 Comments

  1. I agree with his comment. When I was sick I could not pay and three months went arrears. By that time a year end and as per them its expired. Although the contract is up to 55 years. (If what was paid calculated the three months arrears was nothing). But for us to have the benefit we have to pay back. My Hospital was 55,000/= and they wanted me to first pay them the 30,000/= to pay back the 55,000/=. But the representative was sure, after paying the 30,000/= I wont get the 55,000/= So my cost would be 85,000/=. and plus i have to continue the 10,000/= monthly to maintain the policy which will not pay me.

    Alternatively I have suggested to them its better to have it in their savings account so that in an emergency we could withdraw our full amount. But their saving rate is as low as 4% per annum. who will invest ?

    So its absurd having a life Insurance with them.

    ReplyDelete
  2. Advice to read the conditions before join and do not share till know the truth! If this is a wrong information it will become a sin to you !Now a day spreading news against Amana everywhere-Thanks to Fawzan

    ReplyDelete
  3. if someone got unfair please file the case against Amana and get the solution, if you are not wrong you will get justice, even you didnt get here allah will catch them Aakira".

    ReplyDelete
  4. Brother you may have bought the policy without reading the conditions and you may not aware well about it. This is not a saving account to get back the money you have paid. I know well about amana takaful they never do things against to shari ah and to the conditions. Please dont share these things if u dont know full informations.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. சகோதரர் செய்யத் அஹமத் அவர்களின் கூற்றை நான் முற்றாக ஆதரிக்கின்றேன். சரி காண்கின்றேன். அமான தகாபுள் என்னையும் இப்படித்தான் ஏமாத்தியது.
    நானும் கிட்டத்தட்ட 6 வருடங்கள் தகாபுள் இன்சுரன்ஸ் கட்டியுள்ளேன். எனக்கும் என் குடும்பத்தினருக்கும் கம்பளையில் வைத்து ஒரு மோசமான வீதி விபத்திற்கு முகம் கொடுக்க ஏற்பட்டது. சுமார் 15 வாரங்கள் தொடர்ச்சியாக பேராதனை டீச்சிங் ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டேன். எனது இரண்டு கால்களும் முறிந்து விட்டது. பல சத்திர சிகிச்சைகள் மேற்கொண்டு அல்லாஹ்வின் உதவியால் உயிர் தப்பினேன். எனக்கும் இன்சூரன்ஸ் பணம் தர மறுத்து விட்டார்கள். அரச வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றதால் பணம் மறுக்கப்பட்டது.
    அதன் பின் 3 வருடங்கள் நடமாட முடியாமல் வீட்டிலேயே இருந்தேன். அப்பவும் எனது பொலிசியை முறித்துக்கொள்ளுமாறு பல முறை கடிதம் எழுதியும் எனது செமிப்ப்பு பணத்தை தர மிகவும் கஷ்டப்பட்டார்கள். அவர்கள் பொலிசியை தொடரும் படியே கூறி நின்றார்கள்.
    கடைசியாக நான் இப்போ பர்சளி ஹென்டிகேப்ட் ஆகையால் என்னால் உழைக்க முடியாது. பணம் செலுத்தவும் முடியாது. எனக்கு பார்சலி ஹென்டிகேப்ட் ஆனதால் இன்சூரன்ஸ் பணம் தாருங்கள் என கேட்டதற்கு அவர்களின் சூரா சபை உலமாக்கள் 3 பேர் வருகை தந்து (வேறு விடயமாய் புத்தளம் வந்திருந்தார்கள்) பார்வையிட்டு விட்டு போய் பதில் தருவதாக கூரி விட்டு போய் எனது கால்கள் வெட்டி அகற்றப்பட்டால் (amputation ) மட்டுமே ஹென்டிகேப்ட் ஆக கருத முடியும் எனவும் அதனால் பணம் தர முடியாது எனவும் மறுத்துவிட்டார்கள். அவர்களின் யாப்பு அப்படித்தான் சொல்கிறதாம். ஆகையால் விரைவில் சுகம் பெற ஒரு துவாவை மட்டும் எழுதி அனுப்பியிருந்தார்க. இதனை அதிகம் அதிகம் ஓதி இறைவனிடம் சுகத்தை கேட்க சொன்னார்கள். நான் அமானா தகாபுக் என்பதனை மாற்றி அம்மன தகாபுள் என பெயர் வைக்கும் படி சொல்லி அனுப்பினேன். ( போலீசி முகவரிடம்)

    ReplyDelete
  7. Yes, really I also have much experience, and my friends also. I'm thinking first we have to create a FB page, after that can take a action together. Really they are cheating filtered muslims. Can open a fb page.
    Thanks Aman

    ReplyDelete
  8. One of my friend also cheated by the above bloody Amana Thakaful...

    ReplyDelete