Subscribe Us

header ads

எடிசலாட் வடிக்கையாளகளின கவனத்திற்கு;


எடிசலாட் நிறுவனம் பல விதமான விளம்பரங்களை மக்களுக்கு அறிவித்து மக்களை ஏமாற்றிவருகின்றது.

இதை யாரும் கண்டுகொள்வதுமில்லை, தெரிந்துகொள்வதுமில்லை. கொழும்புக்கு போகமுடியாதவர்கள் ஈ.சேனல் மூலம் தனது பெயர்களை பதிந்துகொள்ளும் வசதி சகல தொலைபேசிகளூக்கும் இருக்கும் நிலையில், எனது எடிசலாட் மூலம் பதிவுக்கு தொடர்புகொண்டபோது, வணக்கம் உங்களூடன் உரிய அதிகாரி தொடர்புகொள்வார் பொறுத்திருங்கள் என்றும் இதற்கு ஒரு நிமிடத்துக்கு 8 ரூபா அறவிடப்படும் என்றும் சொல்லப்படும், நாமும் காத்திருக்கும் போது 29 செக்கனில் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிடும், இதற்கு 12ரூபா வெட்டப்படுகின்றது,மீண்டும் இதே நிலை இப்படியாக 10 முறை தொடர்புக்கு 120ரூபா வெட்டப்பட்டும் எதுவும் நடக்கவில்லை. இப்படியாக மக்களை சுரண்டும் எடிசலாட் நிறுவனம் பற்றி மக்கள் மிகவும் அவதானமாக இருங்கள். அதோடு, நமது கண்ககில் பணம் இருக்கும் நிலையில் பணம் போதாது கடன் தேவை என்றால் 1 அழுத்துங்கள் என்று சொல்லப்படும், நாமும் அவசரத்தில் 1 ஐ, அமுக்கியதும் நமது காசையே நமக்கு வட்டிக்கு கழிப்பார்கள். எனவே இதில் எல்லோரும் மிக கவனமாக இருங்கள். 

இன்று எனக்கு நடந்த ஈ சேனல் கொள்ளை இலங்கை முளுதும் இதுதான நடந்திருக்கும், எனது நண்பனின் வேறு ஒரு நிறுவன தொலைபேசி மூலம் தொடர்புகொண்டபோது ஒரு நிமிடத்துக்குள் சகல பதிவுகளும் செய்யப்பட்டு டாக்டரை சந்திக்கும் காலம், நேரமும் தரப்பட்டது. எனவே ம்க்களிடம் கொள்ளையடிக்கும் எடிசலாட் நிறுவனத்தின் இம்மாதிரியான் செயல்களை அடுத்தவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

-S.Abdul Samad-

Post a Comment

0 Comments