Subscribe Us

header ads

ஆப்­கானில் திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான உற­வுக்­காக இளம் பெண்­ணுக்கு கற்­களால் எறிந்து மர­ண­தண்­டனை

ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் தீவி­ர­வா­தி­களின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள பிராந்­தி­யத்தில் திரு­ம­ணத்­துக்கு அப்­பா­லான உறவில் ஈடு­பட்­ட­மைக்­காக இளம் பெண்­ணொ­ரு­வ­ருக்கு கற்­களால் எறிந்து மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.


பிரோஸொக் பிராந்­தி­யத்தில் நிறை­வேற்­றப்­பட்ட மேற்­படி மர­ண­தண்­ட­னையை வெளிப்­ப­டுத்தும் 30 செக்கன் வீடியோ காட்சி இணை­யத்­த­ளங்­களில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.



ரொ­க்ஸஹனா என்ற மேற்­படி 19 வய­துக்கும் 21 வய­துக்கும் இடைப்­பட்ட வய­து­டை­ய­வ­ராகத் தோன்றும் குறிப்­பிட்ட பெண், தரையில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த குழியொன்றில் அமர்ந்­தி­ருக்க, சுமார் 15 ஆண்கள் அவர் மீது கற்களை வீசி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை இந்த வீடியோ காட்சி வெளிப்­ப­டுத்­து­கி­றது. அந்த வீடியோ காட்­சியில் கற்கள் உடல் மீது படு­கையில் அந்தப் பெண் உச்ச ஸ்தாயியில் கூக்­கு­ர­லிட்டு அழு­கிறார்.



அங்கு இவ்­வாறு திரு­மணத்­துக்கு அப்பாலான உறவு குறித்து பெண்­ணொ­ரு­வ­ருக்கு கற்களால் எறிந்து மரணதண்டனை நிறைவேற்றப்படு வது இந்த வருடத்தில் இதுவே முதல் தடவையாகும்.

Post a Comment

0 Comments