தேசிய அரசாங்கத்தின் அமைச்சர்களில் மிகவும் மோசமான செயற்பாடுகளை கொண்டுள்ள அமைச்சாக கல்வி அமைச்சு புகழ்பெற்றுள்ளது.
கல்வி அமைச்சராக செயற்படும் அகில விராஜ் காரியவசத்தின் முட்டாள்தனமாக செயற்பாடுகள் காரணமாக இந்த ஆண்டியில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் முதலாம் ஆண்டு பாடசாலை அனுமதியை பெறமுடியாத நிலையில் ஒரு ஆண்டை வீணாக்கியுள்ளார்கள்.
அகில விராஜ் கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் தேசியப் பாடசாலை தொடர்பான அதிகாரிகளின் கொட்டம் அதிகரித்துள்ளது.
தங்கள் இஷ்டம் போன்று மாணவர்களை பாடசாலைகளில் அனுமதிப்பதும், அனைத்து தகுதிகள் இருந்தும் பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்க மறுப்பதுமாக அவர்கள் மாணவர்களின் கல்வியுடன் விளையாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
பாடசாலைக்கு நூறு மீற்றர் தூரத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, கிலோமீற்றர் கணக்கான தூரத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு பாடசாலை அனுமதி கிடைக்கும் விநோதங்கள் அகில விராஜின் காலத்தில் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்ட ஒருதாய் தனது பிள்ளையுடன் சிலாபம் பிரதேசத்தில் பாடசாலை முன்பாக நடுவீதியில் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார். எனினும் அவருக்கு இன்னும் தீர்வு கிடைக்கப்பெறவில்லை.
அதே நேரம் இவ்வாறான ஒரு பிரச்சினைய பன்னிப்பிட்டிய பிரதேச பெற்றோரும் எதிர்கொண்டுள்ளார்கள். தங்களின் பிள்ளைக்கு பன்னிப்பிட்டிய தர்மபால பாடசாலை அனுமதி கிடைக்காத மனவேதனையில் பாடசாலை முன்பாக உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்த பிரதமர் அலுவலகம் தலையிட்டு, குறித்த மாணவருக்கு கொழும்பு மகாநாம பாடசாலையில் அனுமதி பெற்றுக் கொடுத்துள்ளது.
தேசியப் பாடசாலை பணிப்பாளர் அயிலப்பெரும என்பவரின் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளும் இதற்கான காரணமாகும்.
சிறுபான்மை கல்வித்துறையிலும் இதுபோன்ற பல்வேறு முறைகேடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள முஸ்லிம் மகளிர் பாடசாலை ஒன்றின் அதிபரும் குறித்த அயிலப்பெருமவின் நட்டைப் பயன்படுத்தி முறைகேடான செயற்பாடுகளில் ஈடுபடுவதுடன்,
மாணவிகள் அனுமதி விடயத்தில் சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொள்வதாகவும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


0 Comments