உள்ளூர் போட்டியின் போது மயங்கி விழுந்த நமீபியா கிரிக்கெட் வீரர் ரேமண்ட் வேன் ஸ்கூர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்..
நமீபியா தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த 25 வயதான ரேமண்ட், உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போட்டியின்போது தீடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரேமண்ட் உயிரிழந்துள்ளார். அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
விக்கெட் காப்பாளர், மற்றும் துடுப்பாட்டகாரரான ரேமண்ட், சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தகுதிச் சுற்றுப்போட்டிகளில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடிய நமீபியா அணியில் இடம்பெற்றிருந்தார். இதுதவிர, அவர் 92 முதல்தர போட்டிகளின் மூலம் 20 அரை சதங்களுடன் 4,000 ஓட்டங்களை குவித்துள்ளார்.


0 Comments