Subscribe Us

header ads

யாழில் விபச்சாரம் இடம்பெறுவதாக விடுதியொன்று இளைஞர்களால் சுற்றி வளைப்பு

யாழ்ப்பாணத்தில் உள்ள விடுதியொன்றில் விபச்சாரம் இடம்பெறுவதாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களும் தமிழ்த் தேசியப் பண்பாடுப் பேரவையினரும் இணைந்து சுற்றி வளைப்பில் ஈடுபட்ட சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்.இந்துக்கல்லூரி சுற்று வட்டத்திற்கு எதிரே உள்ள “லாண்ட் மார்க்” விடுதியையே இன்று காலை சுற்றி வளைத்துள்ளனர்.

இதன்போது இளைஞன் ஒருவரையும் யுவதியொருவரையும் கையும் மெய்யுமாக பிடித்ததாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த இளைஞன் பல தடவைகள் வெவ்வேறு யுவதிகளுடன் குறித்த விடுதியில் தங்கிச் சென்றதாக அப்பகுதி இளைஞர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்தே இந்த விடுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments