பங்களாதேஷில் இரண்டு தலைகளுடன் பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.
இக்குழந்தை ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் எனவும் , ஆனால் ஒரே உடல் , இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களுடனேயே பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
டாக்காவிலுள்ள வைத்தியசாலையிலேயே அக்குழந்தை தற்போது சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்கு வளர்ச்சியடைந்த தலைகள் இரண்டை குறித்த குழந்தை கொண்டுள்ளது. மேலும் இரண்டு வாயாலும் சுவாசிப்பதுடன் , பாலையும் குடித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் என்ற போதிலும் ஒருவருக்குரிய முக்கிய உடலுறுப்புகளை மட்டுமே அவர்கள் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலை dicephalic parapagus என அறியப்படுவதாகவும் , 50,000 முதல் 1 இலட்சம்
குழந்தைகளில் ஒன்றே இவ்வாறு பிறப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments