Subscribe Us

தூங்கும் வனம் - கவிதை

 பச்சை கட்சியின் 
பட்ஜெட் வாசிப்பில் 

மிச்சம் உறுப்பினர் 
அச்சா படுத்தனர்.
நாட்டில உள்ள 
நாட்டாம கூட 
மூட்ட சுமக்காது 
கேட்டான் பட்ஜெட்ட
நாங்கள் அனுப்பியோர் 
பாங்காய் அமர்ந்து 
தூங்கி வழிந்தனர்.
கிட்டத்தில் நின்று 
திட்டத்தை படிக்கையில் 
கொட்டாவி விட்டே 
பட்டென்று சாய்ந்தார்
மத்தியான நேரம் 
பத்திரம் படிக்கையில் 
பத்திரமாக 
நித்திரை கொண்டார்
அடுத்த பட்ஜெட்ட 
படுத்துக் கேட்க 
பாராளு மன்றில் 
தாராளமாக 
கட்டில் போட்டு 
செட்டப் செய்யவும் 
(காத்தான்குடி நிஷவ்ஸ் – 21/11/2015)


Post a Comment

0 Comments