Subscribe Us

header ads

155 ஆம் இலக்க பஸ்ஸில் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்ட நபர்: காணொளியை அனுப்பிய சக பயணி (VIDEO)

பொதுப் போக்குவரத்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆண்கள் தொடர்பில் ஆங்காங்கே செய்திகள் வெளியாகுவது நாம் அறிந்ததே.

இவ்வாறான காமுகர்களில் ஒரு சிலரே பிடிபடுவதுடன் , சட்டத்தின் முன்னும் நிறுத்தப்படுகின்றனர்.

ஆனால் பலர் தப்பித்து விடுகின்றமை வேதனைக்குரியது.

மேலும் இவ்வாறான சிக்கல்களுக்கு முகங்கொடுக்கும் பெண்களில் பலர் , பல்வேறு காரணங்களுக்காக இவற்றை வெளியே சொல்ல தயங்குவதுடன் ,விரும்புவதுமில்லை.

இந்நிலையில் , 155 ஆம் இலக்க பஸ்ஸில் இன்று காலை ஆணொருவர் பெண்ணொருவரிடம் யாரும் அறியா வண்ணம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காணொளி எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இதனை படம்பிடித்த சகபயணியொருவர் எமக்கு அனுப்பியுள்ளார்.

பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு ஏற்படும் இவ்வாறான சில்மிஷங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பதற்கும் , விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமே இதனை செய்தியாக உங்களுக்கு வழங்குகின்றோம்.

மேலும் இத்தகைய பஸ்களில் பயணிப்போர் அங்கு இடம்பெறும் திருட்டு தொடர்பிலும் அவதானமாக இருக்கவேண்டியது அவசியமாகும்.

Post a Comment

0 Comments