அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களினால் காரைதிவு பிரதேச செயலக நிர்வாகத்தின் கீழுள்ள மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளி கட்டிட நிதிக்காக ரூபாய் 01 மில்லியன் நேற்று வழங்கப்பட்டது.
கடந்த பொதுத்தேர்தலின் போது பிரச்சாரதிட்க்கு வந்த அமைச்சர் ரிசாத் இந்த பள்ளிவாசலின் கட்டிடநிர்மான பணிகளை பார்வையிட்டதுடன் விரைவில் தன்னால் முடியுமான உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதியளித்திருந்தார்.
இவ்வுதவி தொகையை கையளிக்கும் நிகழ்வு நேற்றுமாலை மாவடிப்பள்ளி ஜும்மா பள்ளிவாசல் முன்றலில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கடந்த பொதுத்தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களான முன்னாள் எம்.பி அப்துல் மஜீத்,சிம்ஸ் பல்கலைகழக முதல்வர் பொறியலாளர் அன்வர் முஸ்தபா ,SEUSL முன்னாள் உபவேந்தர் இஸ்மாயில்,தொழிலதிபரும்,மக்கள் காங்கிரசின் வேட்பாளருமான பசில் ஹிஸாம், மக்கள் காங்கிரசின் பிரமுகரும்,பிரச்சார செயலாளரும்,வர்த்தகருமான ஜுனைடீ ன் (மான்குட்டி), கல்முனை மாநகர சபை உறுப்பினர் cm. முபீத் மற்றும் பலரும் ஜும்மா பள்ளி நிர்வாகத்தினரும் கலந்துகொண்டிருந்தனர்.
படமும்,செய்தியும் -கலைமகன்
0 Comments