Subscribe Us

header ads

வலி நிவாரணியால் இதயம் வலிக்கும்...ஜாக்கிரதை

சாதாரண தலைவலி, உடம்பு வலி, கை, கால் வலிக்கெல்லாம் உடனடியாக வலி நிவாரண மாத்திரையை எடுத்து விழுங்கும் பழக்கமுள்ளவரா நீங்கள்? அப்படி நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகள், உங்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாத நோயை வரவழைக்கலாம், ஜாக்கிரதை என்கிறார்கள் மருத்துவர்கள். 

குடும்பப் பின்னணியில் இதய நோயோ, பக்கவாதமோ இல்லாதவர்களுக்கு, வலி நிவாரண மாத்திரைகளைக் கொடுத்து சோதித்த போது, மாத்திரையே எடுத்துக் கொள்ளாதவர்களைவிட, எடுத்துக் கொண்டவர்களுக்கு இதய நோய்களும், பக்கவாதமும் அதிகம் தாக்கியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 

கூடியவரையில் வலியைப் பொறுத்துக் கொள்வது அல்லது உடனடியாக மருத்துவரை அணுகுவது மட்டுமே பாதுகாப்பான வழிகள் என்றும் எச்சரித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Post a Comment

0 Comments