Subscribe Us

header ads

விமான பயணத்தில் பக்கத்து சீட் ஆசாமியும் நீங்களாகவே இருந்தால்...?

உறவுவழியாக எவ்வித சொந்தமும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கும் இரு பெண்கள் ஜெர்மனியில் படிக்கச் சென்றபோது சந்தித்துக் கொண்டதாக சில தினங்களுக்கு முன் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தோம். 

இதுபோல ஒரேமாதிரி உருவம் கொண்டவர்களை ஜெர்மானிய மொழியில் ‘டோப்பெல்கேங்கர்ஸ்’ (உருவப்போலி) என்று அழைப்பர் எனவும் குறிப்பிட்டிருந்தோம்.

இது நடந்து சில தினங்களுக்குள் மற்றொரு ரத்த சம்பந்தமில்லாத இரட்டையர் ஒரே விமானத்தின் அடுத்தடுத்த இருக்கையில் ஒன்றாக பயணித்திருக்கின்றனர். இங்கிலாந்தைச் சேர்ந்த லீ பேட்டீ என்பவர், தன்னைப் போலவே இருக்கும் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த நீல் தாமஸ் என்பவரை நேற்று முன்தினம் ஒரு விமான பயணத்தில் எதேச்சையாக சந்தித்துள்ளார்.

உருவத்தில் ஒரேமாதிரியுள்ள இவர்கள் தற்போது டுவிட்டரின் ட்ரெண்டாக மாறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற அரிதான விஷயங்கள் அடிக்கடி நடப்பது கடினம்தான்.

உங்களது உருவப் போலியையும் சந்திக்கத் தயாராக இருங்கள். எந்த வினாடியும் அவர்கள் உங்களைக் கடந்து செல்லலாம். 

Post a Comment

0 Comments