Subscribe Us

header ads

கிழக்கு முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி

இன்று நாடு முழுவதும்   ஆசிரியர்  தினம் சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினத்துக்காக அந்த நல்லாசான்களுக்காக கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் விடுக்கும் வாழ்த்துச்செய்தி:

இந்த நன்னாளில் இலங்கை அளவிலும் சர்வதேசளவிலும் மிகச்சிறந்த சாதனையாளர்களை உருவாக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்தார்.


 அவர் தொடர்ந்தும் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கையில்: .

தரமான, கல்வியை வழங்கவும் தான் வழங்கும் கல்வியால் சகலரும் பயனபெறவும் இதற்காக தங்களை அற்பணித்துள்ள மதிப்பிற்குரிய ஆசிரியர்களுக்கான இத்தினமான இந்த நாளில் ஆசிரியர் தினத்தை கொண்டாடும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். 

இலங்கையின் எதிர்கால குடிமக்களை சிறப்புற உருவாக்குகிற மிகப்பெரிய பொறுப்பு இந்த ஆசிரியர்களுக்கே இருக்கிறது. எனவே அத்தகைய குடிமக்கள் வகுப்பறையில்தான் உருவாக்கப்படுகிறார்கள். அப்பெரும்பணியை செய்கிற ஆசிரியர் பெருந்தகைகளுக்கு ஆசிரியர் தினத்தில் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மனமகிழ்கிறேன் என்றும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments