Subscribe Us

header ads

பஸ்ஸில் ஜோடியின் லீலை: பொறுக்க முடியாமல் பொங்கி எழுந்த சக பயணிகள்

மஹரகமையிலிருந்து, புறக்கோட்டை நோக்கி பயணித்த பஸ்ஸொன்றில் பயணித்த பெண் மற்றும் ஆணொருவர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் சக பயணிகள் வெளிப்படையாக விமர்சித்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பஸ்ஸில் இருந்த பெண்ணொருவர் , கையடக்கத் தொலைபேசியில் கொஞ்சிக் குலாவியபடி  கதைத்துக்கொண்டு வந்துள்ளார்.

இடைநடுவே அப்பெண்ணுக்கு தெரிந்த வேறொரு ஆண் ஒருவர் பஸ்ஸில் ஏறுவதைக் கண்டவுடன் , அழைப்பை துண்டித்து குறித்த ஆணுடன் கதைத்துக்கொண்டு வந்துள்ளார்.

மேலும் மிகவும் நெருக்கமாகவும் ,அடுத்தவர் முகம் சுளிக்கும் வண்ணமும் அவர்கள் நடந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் குறித்த பெண் ஒரு தரிப்பிடத்தில் இறங்கியுள்ளார்.

எனினும் அவர் நட ந்துகொண்டவிதத்தை பொறுத்துக்கொள்ள முடியாத சக பயணிகள் குறித்த நபரையும் , இறங்கிய பெண்ணையும் திட்டித்தீர்த்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments