தும்முல்லவைச் சேர்ந்த விமல் வீரவன்ச காலத்திற்கு காலம் பிரபல்யம் அடைவதற்காக, பல்வேறு வேடங்களில் நடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நடிப்பது அவரது வழமையாகும். ஐரோப்பிய நாடுகளை கடுமையாக திட்டித் தீர்க்கும் விமல், அந்த நாடுகளில் பல மாதங்கள் தங்கியிருக்கின்றார்.
முழுவதும் மக்களை ஏமாற்றும் பொய்களையே அவர் மேற்கொள்கின்றார்.
நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை காட்டிக் கொடுப்பதாக குற்றம் சுமத்தி சத்தமிடுகின்றார். இவ்வாறனவர்கள் கிணற்றுத் தவளைகளுக்கு நிகரானவர்கள்.
கிணற்றிலிருந்து தெரியும் அளவே இந்த உலகம் என நினைக்கின்றார்கள்.
நல்லாட்சி அரசாங்கம் படைவீரர்களை மட்டுமன்றி ராஜபக்சக்கள் மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவிப்பதனையும் தடுத்துள்ளது.
தவறுதலாகவேனும் மஹிந்த தரப்பு வெற்றியீட்டியிருந்தால் நாட்டு மக்களே மின்சார நாற்காலியில் தண்டனை அனுபவித்திருக்க வேண்டுமென கொழும்பு ஊடகமொன்றுக்கு முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
0 Comments