Subscribe Us

header ads

மனைவி மத்திய கிழக்கு நாட்டில் பணி: பூட்டியிருந்த வீட்டில் கணவனின் சடலம்

மூடப்பட்டிருந்த வீட்டிற்குள் இருந்து இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரித்தனர்.

கிண்ணியா, பூவரசந்தீவை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையான சாஹூல் ஹமீட் நஜீவுல்லா (வயது 25) என்பவரே இவ்வாறு சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தேநீர் கடை ஒன்றில் சமையல்காரராக வேலை செய்து வந்த குறித்த நபருக்கு அவரது தாயார் வழக்கம் போல பகல் உணவை கொடுத்தனுப்பியபோது வீடு மூடப்பட்டிருந்தது.

மாலை வரையும் வீடு திறக்கப்படாததால் சந்தேகத்தின் பேரில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு கதவை உடைத்து பார்த்தபோதே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபரின் மனைவி மத்திய கிழக்கு நாடொன்றில் பணியாற்றி வருவதாகவும், வழமை போன்று அவர் வேலை முடிந்து வீட்டிற்கு உறங்க சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

கிண்ணியா பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments