பொலிஸ் சேவையின் தரத்தை மேம்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாப்பதற்கும், ஒரு சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டங்களின் போதும் பொலிஸார் பணி ஒரு பெரும் பங்காகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,
சிறந்த மற்றும் ஒழுக்கமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கு பொலிஸாரின் பங்கு விசாலமானது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதுடன் நல்லாட்சிக்காக உருவாக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்ளைகை செயற்படுத்தும் போது பொலிஸ் பிரிவு தனித்துவமான பங்காற்றுகின்றது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் சேவை என்பது இலங்கையில் மட்டுமன்றி உலகின் அனைத்து நாடுகளிலும் மனிதர்களின் நலன்கள் நலன்புரிகளுக்காக சேவையாற்றும் தரப்பே பொலிஸாராகும்.
நாட்டின் வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் வறுமையை ஒழிப்பதன் மூலம் பொலிஸாரின் பொறுப்புக்களை குறைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments