தன்னை ஏமாற்றி, வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த கணவன் மீது இருந்த வெறுப்பை அவரது பி.எம்.டபிள்யூ. காரின் மீது காண்பித்த சீன மனைவி இந்நாட்டு ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சீனாவின் ஷென்ஸென் நகரத்தில் உள்ள ஒரு கார் நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பி.எம்.டபிள்யூ. காரை பெண் அடித்து உடைத்த சம்பவம் வழிப்போக்கர்களால் படம் பிடிக்கப்பட்டது. ஒரு சுத்தியலைக் கொண்டு அந்தப் பெண் தனது கணவன் தவறு செய்ததை அறிந்து திட்டியவாறு உடைத்ததை பலரும் கூடி வேடிக்கைப் பார்த்தனர்.
சீனாவின் டுவிட்டரான ‘வெய்போ’-வில் இந்த வீடியோ வெளியானது. சுமார், இருபது நிமிடங்களுக்கு அந்தப் பெண் தனது கணவனின் காரை சுத்தியாலால் தனது மொத்த சக்தியையும் பயன்படுத்தி அடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த சம்பவத்துக்காக அந்தப் பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை.

0 Comments