Subscribe Us

header ads

தன்னை தண்டிக்குமாறு: ரிஷாத் பதியுதீன் சவால்

வன்னி மாவட்டத்தில் நில அபகரிப்பு தொடர்பாக தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபித்து, துணிவிருந்தால் தன்னை தண்டிக்குமாறு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சவால் விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சவால் விடுத்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரும், வேறு கட்சிகளைச் சேர்ந்த சிலருமே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை தன்மீது சுமத்தி வருவதாக அமைச்சர் கூறினார்.

எனினும் நில அபகரிப்பு இடம்பெற்றிருந்தால் இதற்கெதிராக முறைப்பாடு பதிவு செய்ய அரசாங்க நிறுவனங்கள் பல உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இதுவரை தனக்கெதிராக அப்படியொரு முறைப்பாடு செய்யப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியுதீன், தேர்தல் காலங்களை இலக்கு வைத்தே இவ்வாறு போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

Post a Comment

0 Comments