இந்திய மீனவர்களின் அத்துமீறல் நடவடிக்கையானது இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. எனவே, கடற்படையின் பலத்தை அதிகரிப்பதற்கும் கடற்பாதுகாப்பினை விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக் ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை ஜே.வி.பி.யின் விஜித ஹேரத் எம்.பி.யினால் கொண்டுவரப்பட்ட இந்திய மீனவர்களின் அத்துமீறலால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாமல் ராஜபக் ஷ எம்.பி. இங்கு மேலும் கூறுகையில்,
எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்தின் மூலமாக எமது நாட்டு மீனவர் கடந்த 30 வருடங்களாக பாதிப்பினையும் அச்சுறுத்தலையும் எதிர் கொண்டிருந்தனர். அத்தகைய யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று இந்திய மீனவர்களால் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அச்சுறுத்தல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
மேலும் அத்துமீறி எமது கடற்பரப்புக்குள் நுழையும் மீனவர்கள் சட்ட விரோத செயற்பாடுகளிலும் ஈடுபடமுடியும். இந்திய மீனவர்கள் எமது மீனவர்களின் வலைகளை நாசம் செய்து மீன் வளங்களையும் சூறையாடிச் செல்கின்றனர்.
இவ்வாறு அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாக இருப்பின் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

0 Comments