Subscribe Us

header ads

இலங்கை பணிப்பெண்ணுக்கு குவைட்டில் மோசமான சித்திரவதை: அதிர்ச்சி தரும் காணொளி

வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் , குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்கள் தங்களது எஜமானால் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் செய்திகள் மற்றும் காணொளிகள் அடிக்கடி வெளியாகி வருகின்றமை நாம் அறிந்ததே.


இந்நிலையில் இலங்கையில் இருந்து குவைட்டுக்கு சென்ற பெண்ணொருவர் அங்குள்ள , சக இலங்கைப் பெண்களால் மோசமாக துன்புறுத்தலுக்கு உள்ளாகும் காணொளியொன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

அந்நாட்டிலுள்ள இலங்கை நிறுவனமொன்றில் வைத்தே பெண்ணொருவர் தாக்கப்படுகின்றார்.

இந்தக் காணொளி எமது செய்தியாளருக்கு கிடைக்கப்பெற்றவுடன் அவர் உடனே அது தொடர்பான தகவல்களை தேடிச் சென்றுள்ளார். இதன்போது அவரது கணவனை பொல்பிதிகல பிரதேசத்தில் சந்தித்துள்ளார்.


தனது மனைவி கடந்த மாதமே தன்னுடன் கடைசியாக கதைத்த தாகவும், அதன் பின்னர் ஒரு அழைப்பையும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த இலங்கை நிறுவனத்திடம் கேட்டபோது , தனது மனைவி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக தனக்கு பெண்ணொருவர் தெரிவித்ததாக
குறிப்பிடுகின்றார்.

Post a Comment

0 Comments