Subscribe Us

header ads

நாய்க் கூட்டுக்குள் தந்தையை அடைத்த மகளுக்கு விளக்கமறியல்

தனது தந்தையை 6 மாதங்கள் நாய்க் கூட்டுக்குள் வைத்திருந்த பெண் ஒருவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொண்ட சோதனையில் இந்த இரக்கமற்ற செயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணைக் கைது செய்த பொலிஸார் கண்டி மஜிஸ்ரேட் நீதிபதி சினித் விஜேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே அவர் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.
கண்டி, மணிக்ஹின்னவிலுள்ள வீட்டின் நாய்க் கூட்டில் இருந்து மீட்கப்பட்ட வயோதிபத் தந்தை பின்னர் மணிக்ஹின்ன வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். 
தனது நாய் குட்டி ஈன்றுள்ளதனால் கடந்த சில நாட்களாக தந்தையை கவனிக்க முடியாமல் போனதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments