Subscribe Us

header ads

இரத்த கசிவை தடுக்கும் தேக்கு இலைகள்

தேக்கு மரம் தமிழகத்தை தாயகமாக கொண்ட தாவரம் என்று சொல்லப்படுகிறது. சிறு பூச்சிகள், கரையான்கள் போன்றவற்றால் அரிக்கப்படாத வலுவான தன்மை கொண்டதாக தேக்கு விளங்குகிறது. பெருமைகளை பெற்ற தேக்கு மரம் மருத்துவ குணத்தை கொண்டதாகவும் விளங்குவது இதன் சிறப்பு ஆகும்.

தேக்கு மரத்தின் இலை, பூ, காய், மரபட்டை இவை அனைத்தும் மருந்துக்காக பயன்படக் கூடியதாகும். தேக்கு மரத்தின் இலையை பயன்படுத்தி ரத்த போக்கை கட்டுப்படுத்தக் கூடிய ஒரு மருந்தை நாம் தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் தேக்கு மரத்தின் துளிர் இலைகள், பட்டைகள், பனங்கற்கண்டு, காய்ச்சிய பால். தேக்கு மரத்தின் துளிர் இலைகளை சிறிய துண்டுகளாக நறுக்கி 4 அல்லது 5 இலைகள் சேர்க்க வேண்டும்.

சிறிதளவு தேக்கு மர பட்டைகளை சிறியதாக உடைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

இதனுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். இலைகள் நன்றாக வேகும் வரை இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.

இந்த தேநீரை எடுத்து காய்ச்சிய பாலை சேர்த்து கொள்ள வேண்டும். இதை பருகி வருவதன் மூலம் ரத்த போக்கு கட்டுப்படுத்துகிறது.

தேக்கு மரத்தின் இலைகளால் செய்யப்பட்ட தேநீரை குடிப்பதன் மூலம் ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை உண்டாகிறது. இதில் காணப்படும் துவர்ப்பு சுவை ரத்தத்தை உறைய வைக்குத் தன்மை கொண்டதாக விளங்குகிறது. மூக்கில் வடியும் ரத்தம், மூலத்தில் ஏற்படும் ரத்த கசிவை கட்டுப்படுத்துவதற்கும் இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. 

Post a Comment

0 Comments