28ம் திகதிக்கு முன்னதாக கடவுச்சீட்டு கிடைத்தால் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச திட்டமிட்டவாறு ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்வார் என கட்சியின் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுக் கடவுச்சீட்டை அதிகாரிகள் திட்டமிட்டவாறு கட்சியின் தலைவர் விமல் பயணத்தை மேற்கொள்வார்.
ஜெனீவா தீர்மானத்தினால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களை தெளிவுபடுத்தும் நோக்கில் கருத்தரங்குகளை நடாத்தவே விமல் வீரவன்ச ஐரோப்பா விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்தார்.
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களும், தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளும் இந்த கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளனர்.
இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளில் இந்த கருத்தரங்கு நடாத்தப்படவுள்ளது.
இந்த மாதம் 25ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரையில் பத்து நகரங்களில் கருத்தரங்குகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்த கருத்தரங்கினை குழப்ப சில தரப்பினர் முயற்சித்து வந்தமை தெளிவாகியுள்ளது என முசாம்மில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


0 Comments