Subscribe Us

header ads

பேருந்தில் தூங்கிய பெண்ணிடம் சில்மிஷம் செய்த முதியவர்: நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பு

சுவிட்சர்லாந்து நாட்டில் பேருந்து ஒன்றில் தூங்கிக்கொண்டு இருந்த இளம்பெண்ணிடம் 78 வயதான கோடீஸ்வர முதியவர் ஒருவர் தகாத முறையில் நடந்துகொண்ட குற்றத்திற்காக நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுவிஸின் சூரிச் நகரில் VBZ என்ற பயணிகள் சொகுசு பேருந்தில் மைல்ஸ் நகரை சேர்ந்த 78 வயதான முதியவர் ஒருவர் ஏறியுள்ளார்.
Goldbrunnenplatz நகரை நோக்கி சென்றுகொண்டு இருந்த அந்த பேருந்தில் ஒரு இளம்பெண் இருக்கையின் அருகில் அந்த முதியவர் அமர்ந்துள்ளார்.
சிறிது நிமிடங்களுக்கு பிறகு, அந்த இளம்பெண் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றவுடன், அருகில் இருந்த கோடீஸ்வர முதியவர் பெண்ணிடம் தகாத முறையில் செயல்பட்டுள்ளார்.
தன்னை யாரும் கவனிக்கவில்லை என எண்ணிய அந்த முதியவர், பெண்ணின் அந்தரங்க பகுதிகளை தீண்டியவாறு அமர்ந்திருந்துள்ளார்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பெண்ணும் முதியவரின் செய்கைகளை கவனிக்கவில்லை என தெரிகிறது.
முதியவர் இறங்க வேண்டிய இடம் வந்தபோது, இளம்பெண்ணிடம் இருந்த பர்ஸ் மற்றும் விலையுயர்ந்த கைப்பேசியை திருடிக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்க முயற்சித்துள்ளார்.
ஆனால், முதியவரின் செய்கைகளை ஆரம்பித்திலிருந்து கவனித்து வந்த அந்த பேருந்தின் ஓட்டுனர், திடீரென பேருந்தை நிறுத்திவிட்டு முதியவரை சுற்றி வளைத்து பிடித்துள்ளார்.
இந்த சம்பவத்தை பொலிசாரிடம் தெரிவித்து அவரை ஒப்படைத்த பிறகு பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது.
2014ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற இந்த சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று சூரிச் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.
விசாரணையின்போது பெண்ணிடம் இருந்த பொருட்கள் கீழே விழுந்தது என்றும், அதனை தான் எடுத்து பத்திரப்படுத்தியதாக முதியவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஆனால், பேருந்தில் இருந்த கமெரா மூலம், முதியவர் அரங்கேற்றிய அத்தனை காட்சிகளும் பதிவாகியுள்ளதால், அவர் தவறான தகவல்களை அளிப்பது உறுதியானது.
முதியவரின் குற்றங்கள் நிரூபனம் ஆகியுள்ளதால், அவருக்கு 25,300 பிராங்குகள் அபராதம் விதிப்பதாகவும், இந்த தொகையை 110 நாட்களுக்கு 230 பிராங்க் வீதம் தவணை முறையில் செலுத்த வேண்டும்.
மேலும், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துக்கொண்ட குற்றத்திற்காக 3,000 பிராங்க் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது மட்டுமில்லாமல், கடந்த ஓராண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கிற்கு செலவான 4,060 பிராங்க் தொகையையும் குற்றவாளியே ஏற்க வேண்டும் என நீதிபதி அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Post a Comment

0 Comments