Subscribe Us

header ads

கொண்டையா, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளார்.

கொடதெனியாவ சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த குறித்த வழக்கில் இருந்து நேற்று விடுதலை செய்யபட்டும், வேறு சில குற்றங்களுக்காக  தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில்,

 தான் சுத்தவாளியாக இருந்தும் தனக்கு அநியாயம் நடந்துள்ளது என கொண்டையா,மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

சட்டத்தரணி உபுல் பிரேமரத்ன என்பவர் இது தொடர்பில் கொண்டையாவிடம் உரையாடி வருவதாகவும், போலீசார் தனக்கு விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடத்தியதாகவும், பலவந்தமாக வாக்குமூலம் எழுதி எடுத்ததாகவும், இவர் குறிப்பிட்ட  சட்டத்தரணியிடம் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments