Subscribe Us

header ads

மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்க அப்பாக்களுக்கு சிகை அலங்காரங்களைச் சொல்லித்தரும் தந்தை!...

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின், டேய்ட்டோனா கடற்கரையருகே பிலிப் மோர்கீஸ் என்கிற தனியாளாக மகளைக் கவனித்து வரும் தந்தை சக தந்தைகளுக்கு மகள்களுடன் பிணைப்பை அதிகரிக்கும் வழியை கற்பித்து வருகிறார்.

மகளுக்கு விருப்பான சிகையலங்காரங்களை யூடியூபின் மூலம் கற்றுக்கொண்ட பிலிப், இவ்விஷயத்தில் மகளிடம் பாஸ் மார்க் வாங்கி தேர்ச்சியடைந்துள்ளார். ஆகவே, தனது இன்பத்தை மற்ற தந்தைகளுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக இவ்வகுப்பைத் தொடங்கியுள்ளார்.

இதில், முதல்கட்டமாக தலைமுடியை எப்படி வாருவது என்பது தொடங்கி போனிடெய்ல், பின்னல், கொண்டை என பலவற்றையும் செய்முறை விளக்கத்துடன் கற்பித்துள்ளார் பிலிப்.

மகளுக்காக கற்றலும், அதை மற்றோருக்கும் கற்பித்தலும் எந்நாளும் இன்பம் பயக்குவதே! 

Post a Comment

0 Comments