Subscribe Us

header ads

கொழும்பு மரதன் ஓட்டப் போட்டி இன்று 6600க்கும் அதிகமானோர் பங்கேற்பு

15ஆவது தட­வை­யா­கவும் நடத்­தப்­படும் எல்.எஸ்.ஆர். கொழும்பு மரதன் ஓட்­டப்­போட்டி இன்று காலை 6 மணிக்கு ஆரம்­ப­மாகும். உள்­நாட்டில் மட்­டு­மல்­லாமல் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தும் மொத்­த­மாக 6600 இற்கும் அதி­க­மான வீர வீராங்­க­னைகள் இதில் பங்­கு­கொள்­கின்­றனர்.
கொழும்­பி­லுள்ள விளை­யாட்­டுத்­துறை அமைச்­சுக்கு அருகில் ஆரம்­ப­மாகும் இந்த 'கொழும்பு மரதன்' ஓட்டப் போட்­டி­யா­னது பொரளை, தெமட்­ட­கொடை, வத்­தளை வழி­ யாக ஹமில்டன் வாவி பாதை­யூ­டாக பமு­னு­கம, தலா­ஹேன, பிட்­டி­பத்த ஊடாக நீர்­கொ­ழும்பு கடற்­கரை மைதா­னத்தில் நிறை­வ­டையும்.
இதன் பிர­தான பிரி­வான திறந்த மரதன் ஓட்டப் போட்­டியில் முத­லிடம் பெறு­ப­வ­ருக்கு 2500 அமெ­ரிக்க டொலர்­களும் (345, 000 இலங்கை ரூபா) விமானப் பயணச் சீட்­டொன்றும் வழங்­கப்­படும்.
இரண்­டா­மிடம் பெறு­ப­வ­ருக்கு 1500 அமெ­ரிக்க டொலர்­களும், மூன்­றா­மிடம் பெறு­ப­வ­ருக்கு 1000 அமெ­ரிக்க டொலர்­களும் பரி­சாக வழங்­கப்­படும். மேலும், 4ஆம், 5ஆம் இடங்­களைப் பெறு­ப­வர்­க­ளுக்கு முறையே 500, 200 அமெ­ரிக்க டொலர்­களும் வழங்­கப்­படும்.
இந்த மரதன் ஓட்டப் போட்­டிக்கு சீனா­வி­லி­ருந்து 28 பேரும், இந்­தி­யா­வி­லி­ருந்து 20 பேரும், கென்­யா­வி­லி­ருந்து 17 பேரும், மாலைதீ­வி­லி­ருந்து 8 பேரும் பங்­கேற்­கின்­ றனர்.
இது­த­விர, ஐக்­கிய இராச்­சியம், பாகிஸ்தான், கனடா, ஐக்­கிய அமெ­ரிக்கா, எத்­தி­யோப்­பியா, ஜேர்­மனி, நியூ­ஸி­லாந்து உள்­ளிட்ட 39 நாடு­க­ளி­லி­ருந்து வீர வீராங்­க­னைகள் பங்­கேற்­கின்­றமை விஷேட அம்சமாகும்.

இப் போட்டியின் பரிசளிப்பு விழா நாளை திங்கட்கிழமை நண்பகல் 12.30 மணிக்கு நீர்கொழும்பு கடற்கரை மைதானத்தில் நடை பெறும்.

Post a Comment

0 Comments