Subscribe Us

55 கோடி ரூபா கடன் பெற்று செலுத்தாத அரசியல்வாதிகளுக்கு ஆபத்து!

நாட்டின் முன்னணி அரச வங்கியொன்றில் 55 கோடி ரூபா கடன் பெற்றுக் கொண்ட சில அரசியல்வாதிகள் அதனை செலுத்தாது மோசடி செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமகால அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரும் எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் இரண்டு அமைச்சர்களும், தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இந்த மோசடியுடன் தொடர்புபட்டுள்ளனர்.

தற்போதைய நாடாளுமன்றின் உறுப்பினர் ஒருவர், இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் இந்தப் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

புதிதாக நாடாளுமன்றிற்கு தெரிவான அமைச்சர் ஒருவரே அதிகளவு பணத்தை செலுத்தத் தவறியுள்ளார். இவர் குறித்த வங்கிக்கு 230 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளது.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்த தற்போதைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் 225 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வகித்த தற்போதைய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் 225 மில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது.

கடன் மீளச் செலுத்தாமை தொடர்பில் வங்கி நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.

கடன் தொகையை மீளச் செலுத்தாத குறித்த உறுப்பினர்களை கறுப்புப் பட்டியலிட வங்கி தீர்மானித்துள்ளது.

Post a Comment

0 Comments