Subscribe Us

header ads

இஸ்லாமிய புது வருடம் :- 1437 ஆஷுரா நோன்பு

இஸ்லாமிய புத்தாண்டாகிய ஹிஜ்ரி 1437 முஹர்ரம் மாதத் தலைப்பிறையோடு மலர்கிறது. (அல்ஹம்து லில்லாஹ்) அல்லாஹ்வுக்காகவும் அவனது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த திருத்தூதுக்காகவும் முஸ்லிம்கள் ஏற்றுக் கொண்ட அரும்பெரும் தியாகமே “ஹிஜ்ரத்” “துறந்து செல்லல்” என்ற பொருளைத் தாங்கி நிற்கும் இச் சொல்.
சன்மார்க்க வாழ்வைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தமது சொந்த ஊரையும், சொத்து சுகங்களையும் துறந்து செல்ல உறுதியா இருக்க வேண்டும் என்பதே ஹிஜ்ரத்தின் நோக்கமாகும்.

முஹர்ரம் மாதம் தான் இஸ்லாமிய மாதங்களில் முதல் மாதமாகும். “முஹர்ரம்” என்ற சொல் “புனிதம்” என்ற பொருளைத் தாங்கி நிற்கின்றது. அது ஏன் என்று நோக்கினால் உலகில் மிக முக்கிய நிகழ்வுகள் இந்த மாதத்தின் 10 ஆம் நாளில் (ஆஷுரா) நிகழ்ந்துள்ளன.

வானம், பூமி, மலைகள், கடல்கள் ஆகியவை படைக்கப்பட்டமை இந் நாளில் தான் என வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் இறை அறிவுப்பலகை, எழுதுகோல், ஆகியவற்றைப் படைத்ததும் இந் நாளில் தான். ஆதம் (அலை), ஹவ்வா (அலை) அவர்களையும் படைத்ததும், சுவர்க்கத்தைப் படைத்ததும், அவர்களை அதில் நுழைய வைத்ததும் இந் நாளில் தான்.

முஹர்ரம் மாதம் 10 ஆம் நாளாகிய ஆஷ¤ரா தினத்தில் நோன்பு வைப்பது ஸ¤ன்னத்தாகும். இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷ¤ரா தினத்தில் நோன்பு நோற்றதோடு, ஏனையவர்களையும் நோன்பு நோற்கும் படி ஏவினார்கள். (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்)

அபூ கதாதா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:-

நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷ¤ரா நோன்பு பற்றி கேட்ட போது, சென்ற வருடங்களுக்கான தென்டப்பரிகாரமாகும் என நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

இத்தனை சிறப்பு மிக்க மாதமே ஹிஜ்ரி புத்தாண்டின் முதல் மாதம் முஹர்ரம். இது இவ்வாறு இருக்க முஸ்லிம்களின் உள்ளத்தைப் பூரிப்படையச் செய்யும் ஒரு சோக சம்பவமும் இம் மாதத்தின் 10 ஆம் நாள் இடம் பெற்றுள்ளது.

இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும் கர்பலா களத்தில் இதே ஆஷ¤ரா நாளில் ஹிஜ்ரி 60 இல் ஷஹீதானார்கள். “அநீதிக்கு தலை சாய்ப்பது ஒரு முஃமீனுக்கு அழகல்ல” என்ற தத்துவத்தை இமாம் ஹுஸைன் (ரழி) அவர்கள் உலக மக்களுக்கு அவர்களின் ஷஹாதத் எடுத்துக் காட்டுகிறது. ஹீஜ்ரி புத்தாண்டை உன் வருகை மனிதகுல சுபீட்சத்துக்கும் நாட்டு நலனுக்கும், செழிப்புக்கும் காரணமாக அமைய வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்.

Post a Comment

0 Comments