Subscribe Us

header ads

யாழ் முஸ்லீம் ஒன்று கூடலில் நடைபெற்ற நிகழ்வுகள் (PHOTOS)

வடக்கு மாகாண கல்வி இபண்பாட்டலுவல்கள்இவிளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் யாழ் முஸ்லீம் சிவில் சமூகமும் இணைந்து நடாத்தும் யாழ் முஸ்லீம் ஒன்று கூடல்-2015 (முஸ்லீம் கலாச்சார நிகழ்வு) கடந்த இரு நாட்களாக(25இ26) யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் நிகழ்வுகளை சிறப்பாக நடைபெற்றன.

 இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராஜாஇகௌரவ விருந்தினராக வடக்கு மாகாண பேரவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம்இவடக்கு மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மீனும் கலந்து கொண்டனர்.

அத்துடன் முதலில் அதிதிகள் வரவேற்கப்பட்டு கிறாஅத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியது.ஆரம்ப உரையினை கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு செயலாளர் இ.ரவீந்திரன் ஆற்றினார்.

தொடர்ந்து யாழ் முஸ்லீம் சமூகப்பிரதிநிதிகளின் கருத்துக்கள் இடம்பெற்றது.இடையே தொழுகைகளுக்காக இடைவேளை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாணவர் நிகழ்ச்சிகள் மற்றும் அறிவுக்களஞ்சியம் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது.இதனை மௌலவி எம்.எ.பைசர் மதனி சிறப்பாக தொகுத்து வழங்கினார்.

அடுத்ததாக மூத்த எழுத்தாளர்களுக்கான கௌரவிப்புகள் நடைபெற்றன.இதில் பிரபல ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ லாபீரும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்த வடக்கு பேரவை தலைவர் சி.வி.கே சிவஞானம் இபிரதம விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் த.குருகுலராஜா விசேட விருந்தினராக கலந்து கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அமீன் ஹாஜியார் ஆகியோரின் உரைகள் இடம்பெற்றன.

இறுதியாக யாழ் முஸ்லீம் ஒன்று கூடல் பிரகடனம் செய்யப்பட்டு பரிசளிப்புஇநன்றி உரையுடன் இனிதே நிறைவடைந்தது.

-FAROOK SIHAN-























































Post a Comment

0 Comments