Subscribe Us

MY3யுடன் அமெரிக்காவின் "ஆமி" பேச்சுவார்த்தை - என்ன பேசினார்கள் என்பது வெளியாகவில்லை

அமெரிக்காவின் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சட் ஆர்மிட்டேஜ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

எனினும் இந்த பேச்சுவார்த்தைகளின்போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

கடந்த ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்த சாதகமான நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்துவதற்கு  அமெரிக்கா உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தீவிரமாக வலியுறுத்தியவர் ஆர்மிட்டேஜ் என்பது குறிப்பிடத்தக்கது. 


சிறிசேன ஆட்சிக்கு வந்துள்ளதை தொடர்ந்து அமெரிக்க இலங்கை உறவுகளிற்கு புதிய வடிவம் கொடுப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் காலப்பகுதியில் ஆர்மிட்டேஜ் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்.

  

ஆவணப் படம்
ஆவணப் படம்
ஆவணப் படம்

Post a Comment

0 Comments